இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியா கடைசியாக 1996ஆம் ஆண்டு அனைத் துலகப் போட்டியை நடத்தியது.
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களை நெருங்க உள்ள நிலையில், 'மிஸ் வேர்ல்ட் 2023' போட்டியை இந்தியா நடத்தவுள்ளது. 71வது உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நவம் பரில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், முடிவு தேதி இன்னும் தெரியவில்லை.
இதையொட்டி, 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவரான ஜூலியா மோர்லி டெல்லியில் செய்தி யாளர்களிடம் கூறுகையில், "71வது உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். ஒரு மாதம் நடக்கும் போட்டியில் 130 நாடுகளின் அழகிகள் கலந்துகொள்ள உள்ள னர்," எனத் தெரிவித்துள்ளார்.