குடியிருப்புகளுக்கு வெளியே செடிகளை வளர்க்கும்போது குடும்பத்தினர், அண்டை வீட்டாரின் பிணைப்பு அதிகரிக்கிறது. நீங்கள் வீவக குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் தாழ்வாரத்தில் செடிகளை வளர்க்கலாம். ஆனால், நடைபாதையைப் பராமரிப்பது போன்ற சில எளிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
திருமதி சியா பே எங் இந்த விதிமுறைகளை மிகவும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்கிறார். குயின்ஸ்டவுனில் உள்ள தனது வீவக வீட்டின் வெளியே உள்ள நடைபாதையில் தோட்டத்தை அமைப்பதற்கு ஏற்ப குறைந்தபட்சம் 1.2 மீட்டர் அகலத்தை உறுதிசெய்ய, அளவிடும் நாடாவை அவர் பயன்படுத்துகிறார்.
ெசடி வளர்ப்புக்கு தேசியப் பூங்காவின் அறிவுரை
எல்லா நேரத்திலும் பாதையைப் பயன்படுத்துவோருக்கு ஏற்ற வகையில் தாழ்வாரத்தில் குறைந்தபட்சம் 1.2 மீட்டர் அகலத்திற்கு இடை வெளியை வைத்திருங்கள்.
எந்தப் பொருள்களையும் பாதுகாப்பு சுவர்களின் மேல் வைக்கவோ, கூரையில் தொங்கவிடவோ, கட்டடத்திற்கு வெளியே தொங்கவிடவோ கூடாது.
உங்கள் செடிகளை 1 மீட்டருக்கும் உயரமாக வளராமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.
கொசு உற்பத்தியை தடுக்க தினமும் பாத்திரங்களில் உள்ள தண்ணீரை அகற்றவேண்டும்.
காய்கறிகளை வளர்க்க, தாழ்வாரத்தில் குறைந்தபட்சம் நான்கு முதல் ஆறு மணிநேரம் நேரடி சூரிய ஒளி கிடைக்க வேண்டும்.
மேலும் தோட்டக்கலை குறிப்புகள் மற்றும் ஆதாரங்களுக்கு str.sg/i3NZக்குச் செல்லவும்.

