உடல் உஷ்ணமாவதைத் தடுக்கும் வழிகளில் முக்கியமானது குளியல்.
இந்தக் குளியல் வகைகளில் வெந்நீர், மஞ்சள் பொடி, மண் குளியல், சிகிச்சை பெறும் வயதானவர்களுக்கும் நோயாளி களுக்கும் தரப்படும் ஒத்தடக் குளியல் என ஏராளம் உள்ளன.
இவற்றுடன் தியானம் செய் வது போன்ற அனுபவத்தை வழங்கும் 'ஒலிக் குளியல்' (சவுண்ட் பாத்) பற்றியும் தெரிந்து கொள்வோம்.
இது குளியல் என்று அழைக்கப்பட்டாலும் நாம் நீரில், குளியல் தொட்டியில் குளிப்பதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
எனினும், ஆழமான ஒலி அலைகள் மூலம் உள்ளுறுப்புகளை குணமாக்கும் சக்திகொண்டது.
மாறுபட்ட அதிர்வெண்களில் எழுப்பப்படும் இனிமையான ஒலி அலைகளில் மூழ்கச் செய்து உடலையும் மனதையும் ஓய்வடையச் செய்கிறது 'ஒலிக் குளியல்' பயிற்சி.
நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த எகிப்தியர்கள் முதல் திபெத்திய பாடும் கிண்ணங்களின் இன்றைய பயன்பாடு வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிகிச்சைப் பயன்களுக்காக இந்த 'ஒலிக் குளியல்' பயன்படுத்தப்படுகிறது.
கிரேக்க மருத்துவர்கள் சிகிச்சைக்காக இசைக்கருவிகளைப் பயன்படுத்தியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இசைக்கருவிகளால் எழுப்பப்படும் ஒலி அதிர்வுகள் தூக்கத்தைத் தூண்டி, மனநலக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
மனம் ஓய்வடைகிறது
ஒலிக்குளியல் நாள்பட்ட மன அழுத்தம், பதற்றத்தை திறம்பட நிர்வகிக்கிறது. ஒலிக்குளியல் பயிற்சியாளர்களின் கூற்றுப்படி, ஒலிக்குளியலில் பயன்படுத்தப்படும் அதிர்வு ஒலிகள் மனதை அமைதிப்படுத்துகிறது என்கின்றனர்.
நேர்மறை ஆற்றல் கூடும்
நல்ல எண்ணங்களுடன் செயல்படும் ஆற்றலையும் நல்ல மனநிலையையும் மேம்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருசில நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒலிக்குளியலுக்குப் பிறகு சோர்வு, பதற்றம், கோபம், மனச்சோர்வு போன்ற உணர்வுகள் குறைந்துள்ளதாக தெரி வித்துள்ளனர்.
ஒலிக்குளியலில் பயன்படுத்தப் படும் பாடும் கிண்ணத்தின் அதிர்வு ரத்த அழுத்தம், இதயத் துடிப்பைக் குறைக்கிறது.
பயிற்சியாளர்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்கவும் ஆன்மீக நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுவதாகக் கூறியுள்ளனர்.
குளியலின் பக்க விளைவுகள்
ஒலிக்குளியல் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனினும், ஒரு சில அமர்விற்குப் பிறகு சிலர் சோர்வாக இருப்பதாகவும் வலுவான அதிர்வுச் சத்தம் தலைவலியைத் தூண்டுவதாகவும் கூறியுள்ளனர்.
தகவல்/படங்கள்:
ஸ்டைல் கிரேஸ் ஊடகம்
அமர்ந்து அல்லது ஒரு விரிப்பில் படுத்தபடி காணொளியை இழையவிட்டு, விளக்குகளை மங்கச் செய்து, ஒலியில் மூழ்கி அமர்வு முழுவதும் சுவாசத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

