சிங்கப்பூர் இரவு விழா

சிங்கப்பூர் இரவு விழா

1 mins read

ரச்­சனா வேலா­யு­தம்

'சிங்­கப்­பூர், தலை­சி­றந்த துறை­முக நக­ரம்' என்ற தலைப்­பில் சிங்­கப்­பூர் இரவு விழா ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி அன்று தொடங்­க­வுள்­ளது. சிறிய துறை­முக நக­ரத்­தி­லி­ருந்து பரி­ணாம வளர்ச்சி அடைந்த சிங்­கப்­பூர் நவீன நக­ர­மாக மாறி­யுள்­ளதை முன்­னிட்டு பிராஸ் பாசா, புகிஸ் இடங்­களில் இந்த கொண்­டாட்­டம் நடை­பெ­றும். இவ்­விழா ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி வரை ஒவ்­வொரு நாள் இரவு 7 மணி­யி­லி­ருந்து நள்­ளி­ரவு வரை நடக்­கும்.

ஒரு முக்­கிய துறை­மு­க­மாக செயல்­பட்ட சிங்­கப்­பூ­ரின் 700 ஆண்டு வர­லாற்­றில் பிராஸ் பாசா, புகிஸ் இடங்­கள் வர்த்­த­கத்தை ஊக்­கு­வித்து, அதிக அதி­கா­ரம் கொண்ட இடங்­க­ளாக கரு­தப்­பட்­டன. வர­லாற்­றில் இவ்­வி­டங்­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை மக்­க­ளுக்கு எடுத்­துக்­கூ­றும் வகை­யில் உள்ள அரும் பொரு­ள­கம், மர­பு­டைமை கட்­ட­டங்­கள் போன்­ற­வற்றை மக்­கள் கண்டு ரசிக்­க­லாம். உள்­ளூர் கலை­ஞர்­க­ளின் பல படைப்­பு­களும் இந்­நி­கழ்ச்­சி­யில் காட்­சி­ய­ளிக்­கப்­படும். கண்­களைக் கவ­ரும் வண்­ணம் திரைக்­காட்­சி­க­ளை­யும் இரவு ஒளி கண்­காட்­சி­க­ளை­யும் ரசிப்­ப­தோடு புதிய உணவு வகை­களை ருசித்து அங்­குள்ள கடை­களில் பொருள்­களை மக்­கள் வாங்­க­லாம்.