'நெவெர் ஹேவ் ஐ எவர்' : தமிழர் பழக்க வழக்கங்களின் சித்திரிப்பா...

'நெவெர் ஹேவ் ஐ எவர்' : தமிழர் பழக்க வழக்கங்களின் சித்திரிப்பா...

3 mins read

அஜ்­மினா பானு

உலக மக்­க­ளால் பெரி­தும் விரும்­பிப் பார்க்­கப்­பட்டு வரும் ஓர் அங்­கில நாட­கத் தொடர் 'நெவெர் ஹேவ் ஐ எவர்' (Never Have I Ever). நான்கு 'சீசன்'களைக் கொண்ட இந்த நாட­கத் தொடர், கடந்த 8ஆம் தேதி­யன்று அதன் இறுதி சீசனை வெளி­யிட்­டது.

கதைக்­க­ளம்...

இள­மைப் பரு­வத்­தில் தன் தந்­தையை இழந்த தேவி என்ற கதா­பாத்­தி­ரம், கல்வி, காதல், குடும்­பம், நண்­பர்­கள், மன­ந­லம் போன்ற பல அம்­சங்­களை எவ்­வாறு கையாள்­கி­றார் என்­பதே இந்த நாடகத்­தின் மையம்.

ஆங்­கி­லத்­தில் புதிய முயற்சி...

தமி­ழி­னக் கதா­நா­ய­கி­யை­யும் தமிழ்ப் பெண்­ணாக அவர் எதிர்­கொள்­ளும் சவால்­க­ளை­யும் மைய­மா­கக் கொண்ட நாட­கங்­களை ஆங்­கில ஊட­கங்­களில் பார்ப்­பது அரிது. அமெ­ரிக்­கா­வில் நடப்­ப­தாக அமைந்த இந்­நா­ட­கம், உல­கெங்­கும் வசிக்­கும் புலம்­பெயர்ந்த தமி­ழர்­களை வெகு­வாகக் கவர்ந்­துள்­ளது.

தமிழ் கலா­சார சித்­தி­ரிப்பு...

பிள்­ளை­யார் வழி­பாடு, நவ­ராத்­திரி, அஸ்தி கரைத்­தல் எனப் பல இந்து சடங்­கு­கள் இந்­நா­ட­கத்­தில் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இறு­திப் பாகத்­தில் நடை­பெற்ற திரு­ம­ணக் காட்சி ஒன்­றில் தமிழ்த் திரைப்­படப் பாடல்­கள் இடம்­பெற்­றன.

தமி­ழர் பண்­பாடு ஓர் ஆங்­கில நாட­கத்­தில் காட்­டப்­ப­டு­வ­தும் ஆங்­கில நாட­கங்­களில் ஆங்­கிலப் பாடல்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் வழக்­கத்­திற்கு மாறாக அமைந்த திரு­ம­ணக் காட்­சி­யும் தமி­ழர்­க­ளி­டையே வர­வேற்­பைப் பெற்­றது.

வாழ்க்­கை­யோடு தொடர்பு

படுத்­திக்­கொள்­ள­லாம்...

தின­சரி வாழ்க்­கை­யில் தமி­ழர்­கள் எதிர்­நோக்­கும் சமு­தாய எதிர்­பார்ப்­பு­க­ளை­யும் புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­க­ளின் அனு­ப­வங்­க­ளை­யும் இந்த நாட­கம் சித்­தி­ரித்­துள்­ளது.

கமலா என்ற கதா­பாத்­தி­ரத்­திற்கு வயது கூடிக்­கொண்டே போவ­தால் விரை­வில் மண­மு­டித்­தாக வேண்­டும் என்று அவ­ரின் பாட்டி நச்­ச­ரிக்­கும் சூழல் நாம் அறிந்­ததே. கலா­சா­ரம் அறிந்த, ஓர் இந்­திய மாப்­பிள்­ளை­யைக் குடும்­பத்­தார் பார்த்து மண­மு­டிக்க வேண்­டுமே தவிர காத­லிக்­கும் ஒரு­வனை ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று அந்­தப் பாட்டி கதா­பாத்­தி­ரம் கூறு­வ­தும் சில­ரது இயல்பு வாழ்க்­கை­யில் நடக்­கக்­கூ­டி­யது.

ஆனால் நாட­கத்­தில் இத்­தகைய சூழல்­கள் நகைச்­சு­வை­யாக எளி­தில் தீர்க்­கப்­பட்ட விதம் பல தமி­ழர்­க­ளின் அனு­ப­வத்­தைச் சரி­யாக சித்­தி­ரிக்­க­வில்லை என்று சில­ருக்­குத் தோன்­றி­ இருக்­க­லாம்.

இருப்­பி­னும் கண­வ­ரின் இறப்­புக்­குப் பின் மறு­ம­ணம் புரி­தல், புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­கள் தங்­களின் பன்­முக அடை­யா­ளத்­தோடு போரா­டு­தல் போன்ற அம்­சங்­களை 'நெவெர் ஹேவ் ஐ எவர்' சிறப்­பா­கக் கையாண்­டுள்­ளது என்­றும் சிலர் கூறு­கின்­ற­னர்.

பெண்­ணி­யம்...

திரை­யில் ஆண்­களை மையப்­படுத்­து­வ­தற்கு மாறாக 'நெவெர் ஹேவ் ஐ எவர்' பெண்­களை மைய­மா­கக் கொண்­டி­ருப்­பது புத்­து­ணர்ச்சி அளித்­துள்­ளது. கதா­நா­ய­கி­யோடு நின்­று­வி­டா­மல் அவ­ரின் குடும்­பத்­தி­னர், நண்­பர்­கள் எனப் பெண் துணைக் கதா­பாத்­தி­ரங்­க­ளின் பண்­பு­கள், வாழ்க்­கைச் சூழல்­கள் போன்­ற­வை­யும் ஆழ­மாக ஆரா­யப்­பட்டுள்­ளன.

வேலை இடங்­களில் பெண்­கள் எதிர்­கொள்­ளும் பாலி­யல் ரீதி­யான பாகு­பாடு, ஒற்­றைத் தாய்­மார்­கள் சந்­திக்­கும் சவால்­கள் எனப் பெண்­க­ளுக்­கு­ரிய பிரச்­சி­னை­களை இந்­நா­ட­கம் அலசி ஆராய்ந்­துள்­ள­தும் புதுமை.

விமர்­ச­னம் பல­வி­தம்...

இதற்­கி­டையே தேவி என்ற கதா­பாத்­தி­ரத்­தில் தமிழ் நடிகை ஒரு­வர் நடித்­தி­ருந்­தா­லும் மற்ற தமிழ் கதா­பாத்­தி­ரங்­களில் தமிழ் அல்­லாத இந்­தி­யர்­கள் நடித்­திருந்­தது தமிழ் நடி­கர்­க­ளி­ட­மிருந்து பறிக்­கப்­பட்ட வாய்ப்பு என்று ஒரு­சி­ல­ரின் விமர்­ச­னத்­தைப் பெற்­றது 'நெவெர் ஹேவ் ஐ எவர்'.

தமி­ழர் வாழ்க்­கைச் சாரம் சரி­யா­கப் பிடி­ப­டா­மல் மேலோட்­ட­மான சித்­தி­ரிப்­பாக நாட­கம் இருந்­தது என்­றும் அப்­படி இருந்த காட்­சி­களும் ஆங்­காங்கே திணிக்­கப்­பட்­டது போல் இருந்­தது என்­றும் சிலர் பகிர்ந்­து­கொண்­டுள்­ள­னர்.

மேலும், ஆங்­கில ரசி­கர்­களின் பார்­வைக்­கேற்ப நாட­கம் அமைக்­கப்­பட்­டது எனும் விமர்­சனத்­தை­யும் நாட­கம் பெற்­றது.

இத்­த­கைய விமர்­ச­னங்­களைப் பெற்­றி­ருந்­தா­லும் தமிழ் கதா­பாத்­தி­ரங்­களை மையப்­படுத்தி எடுக்­கப்­பட்ட 'நெவெர் ஹேவ் ஐ எவர்' தொடர், தமி­ழர்­க­ளின் பெரு­மைக்­கு­ரிய ஒன்­றா­கக் கரு­தப்­ப­டு­கிறது என­லாம்.