சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 'இறைவனைச் சென்றடையச் சிறந்த வழி பக்தி செலுத்துவதா? தொண்டு செய்வதா?' எனும் தலைப்பில் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் சிறப்புப் பட்டிமன்றம் நடத்தவுள்ளது. இன்று மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு அனுமதி இலவசம்.
'பக்தி செலுத்துவதே' எனும் அணியில் முனைவர் மன்னை க. இராஜகோபாலன், திருவாட்டி கலைச்செல்வி வைத்தியநாதன், திரு. இராம்குமார் சந்தானம் ஆகியோர் பேசுவர். 'தொண்டு செய்வதே' எனும் அணியில் முனைவர் ராஜி சீனிவாசன், திருவாட்டி கிருத்திகா, திரு. எம். சேவகன் ஆகியோர் பேசுவர்.
நடுவராக எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் பணியாற்றுவார்.

