கைமேல் பலன்; பெருகும் சந்தாதாரர்கள்

கைமேல் பலன்; பெருகும் சந்தாதாரர்கள்

1 mins read
ff701d3a-95d2-45dd-9e5a-a7fb5b2a8071
-

இன்­றைய கால­கட்­டத்­தில் தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளுக்­குச் சவால் விடும் வகை­யில் அமே­சான் பிரைம், நெட்­ஃபி­லிக்ஸ் போன்ற ஓடிடி தளங்­களுக்கு அதிக வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இந்த ஓடிடி தளங்­களை அணுக ஒரு குறிப்­பிட்ட அளவு பணம் செலுத்தி அவற்­றில் சந்­தா­தா­ர­ராக சேர­வேண்­டும்.

ஆனால் பலர் தங்­க­ளது சந்தா மறைச்­சொல்லை (பாஸ்­வேர்ட்) தங்­கள் நண்­பர்­கள் மற்­றும் உற­வி­னர்­க­க­ளி­டம் பகிர்ந்துகொள்­கின்­ற­னர்.

இத­னால் சந்­தா­தா­ர­ராக சேரா­ம­லேயே பல­ரும் ஓடிடி தளங்­களை கண்டுகளிக்­கின்­ற­னர். இது ஓடிடி நிறு­வ­னங்­க­ளுக்கு பெரிய இழப்பை ஏற்­ப­டுத்­து­கிறது. இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்க நெட்­ஃபி­லிக்ஸ் நிறு­வ­னம் மறைச்­சொல் பகிர்வை நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை எடுத்­தது. அதற்­குக் கைமேல் பலன் கிடைத்­துள்­ளது. இந்த நட­வ­டிக்­கைக்­குப் பிறகு புதிய சந்­தா­தா­ரர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் மறைச்­சொல் பகிர்வை முற்­றி­லு­மாக தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்கை அறி­மு­க­மான நான்கு நாள்­களில் நெட்ஃ­பி­லிக்­ஸில் புதி­தாக 280,000 சந்­தா­தா­ரர்­கள் கிடைத்­தி­ருப்­ப­தாக ப்ளூம்­பெர்க் வெளி­யிட்ட அறிக்கை கூறு­கிறது. அதா­வது, ஒவ்­வொரு நாளும் 70,000 சந்­தா­தா­ரர்­கள் புதி­தாக இணைந்­த­னர். மேலும், ஒரு நாளில் மட்­டும் 100,000 புதிய அமெ­ரிக்க சந்­தா­தா­ரர்­கள் நெட்­ஃபி­லிக்­ஸில் 'லாகின்' செய்­துள்­ள­னர்.