டுவிட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கி யதில் இருந்து அந்தத் தளத்தில் பல மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. பணம் செலுத்தினால் 'ப்ளூ டிக்' என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை டுவிட் செய்யலாம் என்பது வரை எல்லா மாற்றங்களும் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் அறிமுகம் நடந்துகொண்டுதான் உள்ளது.
புதிய அம்சங்களைத் தவிர, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத, செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் டுவிட்டர் அறிவித்தது. டுவிட்டர் தளத்தை சுத்தமாகவும் புதுப்பித்ததாகவும் வைத்திருக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த வரிசையில் தற்போது புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, டுவிட்டரில் 'எடிட்' (திருத்தம்) செய்யும் வசதி மேம்படுத்தப் பட்டுள்ளது. ஏற்கெனவே 30 நிமிடங்கள் வரை 'எடிட்' செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கால அளவு 60 நிமிடங்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
இதன்மூலம் டுவிட்டர் பதிவுகளை ஒரு மணி நேரத்தில் 'எடிட்' செய்துகொள்ள லாம். அதிகபட்சமாக 5 முறை டுவிட் செய்வதோடு, அந்தப் பதிவில் 'எடிட்' செய்யப்பட்ட டுவிட் எது என்பது தெரி விக்கப்படும். இந்த வசதி டுவிட்டர் 'ப்ளு' சந்தாதாரர்களுக்கு மட்டுமே செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த வசதிக்காக தனியே கட்டணம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. 'ப்ளு' பயன்பாட்டுக்கான கட்டணமே போதும்.
டுவிட்டரின் அண்மையப் பதிப்பின் மூலம், பயனர்கள் 2 மணி நேரத்திற்கு ஓடும் அல்லது 8 ஜிபி வரையிலான காணொளிகளை டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். ஏற்கெனவே 1 மணி நேரம் (60 நிமிடங்கள்) வரை காணொளி பதிவேற்ற வரம்பு இருந்து வந்த நிலையில் தற்போது அந்த வரம்பு 2 மணி நேரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அம்சமும் 'ப்ளு' பயனர் களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

