கூகலின் புதிய ‘ஏஐ சாட்பாட்’ - ஒரு பார்வை

அண்­மைக்­கா­ல­மாக செயற்கை நுண்­ண­றி­வைப் பற்­றிய நிறைய செய்­தி­கள் வந்த வண்­ணம் உள்­ளன.

ஓப்­பன் ஏஐ நிறு­வ­னம் உரு­வாக்­கிய ‘டால்-இ’ மற்­றும் ‘சாட்­ஜி­பிடி’, ‘மைக்­ரோ­சா­ஃப்ட் ஆபீஸ் 365’ல் உள்ள ‘பிங்’ தேடு­பொ­றி­யில் ‘சாட்­ஜி­பிடி’ ஒருங்­கி­ணைப்பு, கூகல் கம்­பெனி உரு­வாக்­கிய பார்ட் (BARD), என்று அடுக்­கிக்­கொண்டே போக­லாம்.

செயற்கை நுண்­ண­றி­வுப் பந்­த­யத்­தில் கூகல், மைக்­ரோ­சா­ஃப்ட், ஓப்­பன் ஏஐ ஆகி­யன வரிசை பிடித்து நிற்­கின்­றன.

மிக­வும் எதிர்­பார்க்­கப்­பட்ட கூகல் ஆண்­டுக் கூட்­டம் மே 10ஆம் தேதி நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தின் பெயர் I/O 2023. அந்தக் கூட்டத்தில் சில அறிவிப்புகளை கூகல் வெளி யிட்டது.

செயற்கை நுண்­ண­றி­வின் அடிப்­படை­யி­லான ‘சாட்­பாட் பார்ட் (BARD)’ இப்­போது 180 நாடு­க­ளுக்­குப் பயன்­படுத்த அனு­மதி கிடைத்து உள்­ளது.

இந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் பார்ட் என்­னும் சாட்­பாட் முதன்­மு­த­லில் பொது­மக்­க­ளுக்கு பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­பட்­ட­போது காத்­தி­ருப்­புப் பட்டி­யல் வழி­யாக மட்­டுமே அமெ­ரிக்­கா­வி­லும் இங்­கி­லாந்­தி­லும் அணுக முடிந்­தது.

இனி­மேல் காத்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்கிற அறிவிப்பு இந்தக் கூட்டத்தில் வெளியிடப்பட் டது.

கூக­லின் தேடு­பொ­றி­யில், நீங்­கள் கேள்வி கேட்­கும்­போது, வேண்­டிய விடை­களை கொடுத்த பின், அந்­தச் செய்தி உடன் தொடர்­பு­டைய வேறு முக்­கி­ய­மான சில தக­வல்­க­ளை­யும் உங்­க­ளுக்கு கூடு­த­லாக கொடுக்க வேண்­டும் என்று கூகல் நிறு­வ­னம் கருதியது.

அதன் எண்­ணத்­தின் விளை­வு­தான் பார்ட் என்ற செயலி. கூகல் இதனை உரு­வாக்கி உள்­ளது.

பார்ட் - இது ஒரு­வ­ரோடு ஒரு­வர் உரை­யா­டக்­கூ­டிய செயலி. இத­னைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­கள் தங்­க­ளுக்­கான கேள்­வி­க­ளைத் தட்­டச்சு செய்­ய­லாம் அல்­லது மைக்ரோஃபோனில் கேட்­க­லாம். கணினித் திரை­யில், கேள்­விக்­கேற்ற விடையை பார்ட் அளிக்­கும்.

இந்த பார்ட் செயலி, கணினி கற்­றல், இயற்கை மொழி செய­லாக்க நுட்­பங்­கள் ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­ யா­கக்கொண்டு செயல்­ப­டு­கிறது.

இந்த அதி­கப்­ப­டி­யான தக­வல்­களை கூகல் எப்­படி உங்­க­ளுக்கு கொடுக்­கிறது தெரி­யுமா ? ‘நாரா­ய­ண­மூர்த்தி இன்­ஃபோ­சிஸ்’ எந்த ஊர்க்­கா­ரர் என்று கூகல் தேடு­பொ­றி­யில் தேடி­னால், அவ­ரது ஊர் பெயரை நமக்­குத் தரு­வ­தோடு, அதற்­குப் பிறகு அவர் தொடர்­பான வேறு சில தக­வல்­க­ளை­யும் கூகல் நமக்கு தரு­கிறது அல்­லவா? நாலேஜ் க்ராப் கார்டு (Knowledge Graph Card) மூலம்­தான் இந்­தத் தக­வல்­களை கூகல் தரு­கிறது. விரை­வில் PalM2 &. ஜெமினி என்ற வேறு சில புதிய மேம்­ப­டுத்­த­பட்ட மொழி மாடல்­களில் பார்ட் இயங்­கும் என எதிர்­பார்க்­க­லாம்.

பொது­மக்­க­ளுக்கு கூகல் அத­னு­டைய டிரான்ஸ்­ஃபார்­மர் ஆழ் கற்­றல் மாடலை 2017ல் கிடைக்­கச் செய்­தது.

இந்த செய்­கை­யின் மூலம் சாட்ஜிபிடி மற்­றும் பிற ‘லார்ஜ் லாங்­கு­வேஜ் மாடல்­க­ளுக்­கான’ (large language model) அடித்­த­ளத்தை கூகல் அமைத்துக் கொடுத்­தது என்­பதுதான் உண்மை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!