தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் அன்னையர் நாள் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் 'இக்காலச் சூழலில் பிள்ளைகளுக்கும் அம்மாக்களுக்குமான உறவு நலிந்துள்ளது' என்ற தலைப்பில் மாணவர் பட்டிமன்றமும் இடம்பெறும்.
நலிந்துள்ளது என்ற அணியில் செல்வன் சஞ்ஜெய் ராஜகோபாலன், செல்வன் கவின் சசிகுமார், செல்வி லக்ஷனா பாலகங்காதர திலகர் ஆகியோரும் நலியவில்லை என்ற அணியில் செல்வன் ராகுல் சங்கர், செல்வன் முகம்மது அர்ஷாத், கிறிஸ்டபெல் கிரேஸ் ஆகியோரும் வாதிடுவார்கள். நடுவராக திரு யூசுப் ராவுத்தர் ரஜித் பங்கேற்கிறார்.
தொடர்ந்து அன்னையர் திலகம் விருது வழங்கப்படும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். மாலை 4 மணிக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

