சிங்கப்பூரில் நடக்கும் வார இறுதி நிகழ்ச்சிகள் (ஜூலை 1-2)

சிங்கப்பூரில் நடக்கும் வார இறுதி நிகழ்ச்சிகள் (ஜூலை 1-2)

3 mins read
55898c0b-5f3e-4999-947a-110d377b6c17
வார இறுதி நிகழ்ச்சிகள் - படம்: இணையம்

கேரோசல் ஆஃப் வொண்டர்ஸ்

கேரோசல் ஆஃப் வொண்டர்ஸ் மாயாஜால நிகழ்ச்சி. 
கேரோசல் ஆஃப் வொண்டர்ஸ் மாயாஜால நிகழ்ச்சி.  -  படம்: ஈவென்ட்ஸ்பிரைட் 

ஆசியாவின் மிகப்பெரிய குழுவான மாடர்ன் சர்க்கஸ் குழு வழங்கும் இந்த ஆண்டின் மிகப் பெரிய கேளிக்கை நிகழ்ச்சி.

வாணவேடிக்கை, பாவனைப் பயிற்சி, ஜிம்னாஸ்டிக், கேளிக்கை நடனம் உள்ளிட்ட பல்வேறு கண்கவர் அங்கங்கள் இதில் இடம்பெறும்.

வேடிக்கை, சிரிப்பு, திகைப்பு போன்ற பல உணர்வுகளைத் தூண்டும் மாயாஜால நிகழ்ச்சி இது.

நாள்: 1 ஜூலை 2023

இடம்: ‘பீப்பிள்அப் தியேட்டர்’ தெம்பனிஸ்

கட்டணம்: $28.80 முதல்

சிங்கப்பூர் கடல்வழிப் பாதை

சிங்கப்பூர் கடல்வழிப் பாதை சுவரொட்டி.
சிங்கப்பூர் கடல்வழிப் பாதை சுவரொட்டி. - படம்: இணையம்

சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் லயன்ஹார்ட்லேண்டர்ஸ் உடன் இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சி, கடல்துறை வரலாற்றைக் குறித்த புரிதலை ஆழமாக்கும் ஒரு கற்றல் பயணமாக அமையும்.

இதில் சிங்கப்பூர் கடல்துறையின் முன்னேற்றத்தையும் கடல்துறை தொடர்பான வரலாற்றுத் தளங்களையும் காண முடியும்.

மன்னர்கள் காலம் முதல் நவீன காலம் வரை வேரூன்றிய உள்ளூர் கடல்துறை வரலாற்றுச் சின்னங்களைக் காண்பதோடு அது குறித்த கதைகளையும் கேட்டறிய இது ஒரு நல்வாய்ப்பாக அமையும்.

நாள்: 1 ஜூலை 2023, காலை 9 மணி முதல் 11.30 வரை

இடம்: எஸ்எம்யு கணக்கியல் பள்ளி

அனுமதி: இலவசம்

நேர்மறை உளவியல் தின வாசிப்பு விழா 

நேர்மறை உளவியல் தின வாசிப்பு விழா.
நேர்மறை உளவியல் தின வாசிப்பு விழா. -  படம்: ஈவென்ட்ஸ்பிரைட் 

‘மே பி யு ஷுட் டாக் டு சம் ஒன்’ என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் உளவியல்ரீதியான கலந்துரையாடல் இடம்பெறும்.

நேர்மறை உளவியல் பற்றிய அறிமுகப் பேச்சு, மேற்குறிப்பிட்ட புத்தகத்தைப் பற்றிய உளவியலாளர்களின் நுண்ணறிவு, மாணவர்களின் ஆரோக்கியம் குறித்த விரிவான உதவிக்குறிப்பு எனப் பல்வேறு அம்சங்களை ஒட்டிப் பேசுவார் திரு வின்சென்ட் ஓ.

நேர்மறை உளவியல் என்றால் என்ன, சிறந்த வாழ்க்கையை வாழ அது எவ்வாறு உதவும்? நமது நல்வாழ்வை மேம்படுத்த அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சில எளிய மாற்றங்கள் யாவை? போன்ற கேள்விகளுக்கு விரிவாக விடையளிக்கும் இந்த வாசிப்பு விழா.

நாள்: 1 ஜூலை 2023, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை

இடம்: சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்

அனுமதி: இலவசம்

தெமாசெக் ஷாப்ஹவுஸ் 4ஆம் ஆண்டு விழா

தெமாசெக் ஷாப்ஹவுஸ் 4ஆம் ஆண்டு விழா.
தெமாசெக் ஷாப்ஹவுஸ் 4ஆம் ஆண்டு விழா. - படம்: இணையம்

சிங்கப்பூரில் சமூகத் தாக்கத்தை உருவாக்கவும் மாற்றங்களைச் செய்யவும் முயற்சி மேற்கொள்ளும் தெமாசெக் ஷாப்ஹவுஸ் அதன் நான்காம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

‘தி ஆர்ட் ஃபேகல்ட்டி’, ‘ஓல்ட் ஈஸ்ட் இண்டீஸ்’ போன்ற சமூக நிறுவனங்கள் இந்த நடைபாதைகளில் முகப்புகளை அமைக்கும்.

மெட்டா நலச்சங்கக் கலைஞர்களும் சிங்கப்பூர் ஃபேஷன் ரன்வே இளையர்களும் இணைந்து வழங்கும் இந்திய துணிவெளுப்போர் பாரம்பரியத்தின் மலரும் நினைவுகளை வெளிப்படுத்தும் விதமான கலைப் படைப்பைக் காணலாம்.

திரைப்பட சேகரிப்பாளர் வோங் ஹான் மின் சேகரித்துள்ள அரிய பழங்கால திரைப்படச் சுவரொட்டிகளையும் காணலாம். இவை சிங்கப்பூரின் திரைப்பட வரலாற்றின் பொற்காலத்தை நினைவுகூர உதவும்.

மேலும் பல்வேறு பயிலரங்குகளில் பங்கேற்கவும் இவ்விழா வாய்ப்பளிக்கிறது .

நாள்: 2 ஜூலை 2023 வரை

இடம்:தெமாசெக் ஷாப்ஹவுஸ்

அனுமதி: இலவசம்

காவல்துறை பாரம்பரிய மையத்தின் வழிகாட்டு சுற்றுப்பயணம்

காவல்துறை மரபுடைமை நிலையத்தின் வழிகாட்டியுடன்கூடிய சுற்றுப்பயணம்
காவல்துறை மரபுடைமை நிலையத்தின் வழிகாட்டியுடன்கூடிய சுற்றுப்பயணம் - படம்: இணையம்

காலனித்துவ காலம் முதற்கொண்டு சிங்கப்பூர் காவல்துறையின் வளர்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ள காவல்துறை மரபுடைமை நிலையம் ஏற்பாடு செய்யும் சுற்றுப்பயணம் இது.

சிங்கப்பூர் காவல் படையின் செழுமையான வரலாற்றை எடுத்துரைக்கும் கண்காட்சிகள் இதில் இடம்பெறும். காவல்துறை எவ்வாறு சமூகத்தையும் ஒன்றிணைத்து குற்றங்களை எதிர்த்துப் போராடுகிறது என்பதை அறிந்துகொள்ள இது உதவும்.

இந்நிகழ்ச்சியில், கடமையாற்றும்போது உயிர்நீத்த காவல்துறை அதிகாரிகளின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அஞ்சலி செலுத்தலாம்.

நாள்: 1 ஜூலை 2023 வரை

இடம்: ‘நியூ ஃபீனிக்ஸ் பார்க்’, காவல்துறைத் தலைமையகம்

அனுமதி: இலவசம்

குறிப்புச் சொற்கள்