மயக்குகிறது சுவிட்சர்லாந்து

கடும் குளிர், பனி இரண்டையும் அனுபவித்தே தீரவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தேன். வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்தது சுவிட்சர்லாந்து.

ஐரோப்பாவின் வைரமாக மின்னும் இந்த நாட்டிற்குள் ரயிலில் பயணம் செய்யும்போது பனிக் கம்பளியால் போர்த்தப்பட்டிருக்கும் காட்சிகளைப் படமெக்காமல் இருக்க முடியாது. கைப்பேசிக்கு ஓய்விருக்காது.

சென்ற மாத இறுதியில் ஒன்பது நாள்களுக்கு இந்த ஆழகிய தாரகையை நேரில் சந்தித்தேன். 28ஆம் தேதிவரை ஸூரிக்கின் மையப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியபடி பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டேன். 

முதல் நாளன்று ஹோட்டலுக்கு அருகே உள்ள சில இடங்களுக்குச் சென்றேன். இரண்டாம் நாள்தான் பயணம் சூடுபிடித்தது.

ஒவ்வொரு நாளும் காலையில் சென்றபின் இரவுதான் ஹோட்டலுக்குத் திரும்புவேன்.

கடலுக்கு 3,100 மீட்டர் உயரத்தில் இருக்கும் கிரோர்னகிராட் மலைப் பகுதிக்குச் சென்றேன். ஸூரிக்கின் மத்திய ரயில்வே நிலையத்திலிருந்து இங்கு செல்ல சுமார் நான்கு மணிநேரம் ஆகும், மூன்று முறை ரயில் மாறவேண்டும்.

போகும் வழியெல்லாம் இயற்கை எழில் கொஞ்சும். கிரோர்னகிராட்டின் அழகு அதையும் மிஞ்சும்.

நான் சென்றபோது இங்கு வெப்பநிலை பூஜ்யத்துக்கு 12 டிகிரி செல்சியஸ் குறைவு. அன்றைய தினம் வெப்பநிலை ஸூரிக் வெப்பநிலையைவிட 11 டிகிரி குறைவு.

மலை மேலிருந்து வாட்ஸ்ஆப் காணொளிவழி பெற்றோரை அழைத்துப் பேசினேன்.  

இங்கிருந்து ஐரோப்பாவின் ஆக உயரமான மலைகளில் ஒன்றான மேட்டர்ஹார்னைத் தெளிவாகப் பார்க்கலாம். பருவநிலை எனது நண்பனாக மாறியது.

கிரோர்னகிராட்டில் உள்ள ரயில் நிலையம்தான் ஐரோப்பாவில் ஆக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நிலத்துக்கு மேல் உள்ள ரயில் நிலையம். கிரோர்னகிராட்டுக்கு சற்று கீழே உள்ள ஸர்மாட், பிரபல சுற்றுலாத்தளம். அங்கு நான் அதிக நேரம் செலவிடவில்லை. மேலே கண்டு ரசித்த காட்சிகளே எனக்குப் போதும்.

மறுநாள் பெர்ன் நகருக்குப் புறப்பட்டேன். அதற்குப் பிறகு ஒலிம்பிக் விளையாட்டுகளின் அடையாளமாக விளங்கும் லாவ்சானே நகரிலுள்ள ஒலிம்பிக் அரும்பொருளகத்தைக் கண்டுகளித்தேன். 

விளையாட்டுப் பிரியர்களுக்கு அந்த அரும்பொருளகம் சொர்க்கம். அதே உணர்வை ஸூரிக் நகரில் இருக்கும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளன அரும்பொருளகம் காற்பந்துப் பிரியர்களுக்குத் தரும்.

கிரோர்னகிராட்டைப் போல் உள்ள மற்றோர் இடம் ‘ஐரோப்பாவின் உச்சி’ என்றழைக்கப்படும் யுங்ஃபிராவ்யோக்கிற்கு நான் சென்றபோது வெப்பநிலை பூஜ்யத்துக்கு 14 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. காற்று வீசியபோது இன்னும் எட்டு டிகிரி குறைந்தது போல் இருக்கும். 

குளிர்  எனது கைவிரல்களைச் செயலிழக்கச் செய்தது. அங்கு தென்பட்ட ஐரோப்பிய கண்டத்தின் ஆக உயரமான மலைகளின் காட்சிதான் குளிருக்கு மருந்து. 

ஆறாம் நாள் செயின்ட் கேலன் நகருக்குப் பயணம் மேற்கொண்டேன். அங்கு வசிக்கும் எனது தம்பியின் வீட்டில் தங்கினேன்.

செயின்ட் கேலனில் இருந்தபோது அதிகம் பயணம் மேற்கொள்ளவில்லை.

எனினும், சுற்றுலாத் தளம் அல்லாத சாதாரண மக்கள் வசிக்கும் ரோத்தன்தர்ம் எனும் கிராமத்தில் ஒரு நாள் சிறிது நேரம் செலவிட்டேன். காலணி மூழ்கும் அளவுக்குப் பனி, அமைதியான சூழல், இயற்கையின் நாணத்திற்கு ஆடையாக விளங்கிய பனிப் போர்வை ஆகியவை என்னை வேறு உலகில் மிதக்கச் செய்தது. 

சுவிட்சர்லாந்து அமைதியான, பாதுகாப்பான நாடு. தனியாகத்தான் பெரும்பாலான இடங்களுக்குச் சென்றேன். 

தொலைந்துபோக வாய்ப்பில்லை. காரணம், மிகச் சிறப்பான பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பு இங்குண்டு. ரயில்கள், பேருந்துகள், ‘டிராம்’கள் ஆகியவை எந்தெந்த நேரத்தில் எந்த தளத்தில் அல்லது நிறுத்துமிடத்தில் நிற்கும் என்பதைத் துல்லியமாகக் காட்டும் செயலி நமக்குத் துணை. 

சுவிட்சர்லாந்தில் வாழ்க்கைச் செலவினம் அதிகம். ஆனால் அதைக் கையாள அந்நாட்டு மக்களுக்குப் போதுமான சம்பளம் கிடைப்பதை அறிந்தேன்.

சைவ உணவு மட்டுமே உண்ணும் எனக்கு சுவிட்சர்லாந்தில் பிரச்சினையே இல்லை. பீட்ஸா, பாஸ்ட்டா, பர்கர் என உணவு வகைகள் அசத்தலாக இருந்தன.

திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் சாக்லெட் கடைகளும் கைக்கடிகாரக் கடைகளும் தென்படும். இவ்விரண்டுக்கும் சுவிட்சர்லாந்து மிகப் பிரபலமான நாடு. சாக்லெட்டை ஒரு பிடிபிடிக்காமல் இருக்க யாரால் முடியும்!

ஈரரை ஆண்டுகளாக உல்லாசப் பயணம் மேற்கொள்ள முடியாத குறை சென்ற ஆண்டு ஜூன் மாதம் நேப்பாளத்தில் தீர்ந்தது. இன்பத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது சுவிட்சர்லாந்து.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!