தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமரர் லீ குவான் இயூவைக் கொண்டாடும் புதிய குறும்படமும் மின்னிலக்கத் தடமும்

2 mins read
39347871-eb61-4084-a891-7abf404012f9
சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் ஒளியூட்டு. - படம்: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம்
multi-img1 of 3

திரு லீ குவான் இயூ வாழ்ந்த வாழ்க்கையையும் சிங்கப்பூருக்கு அவர் ஆற்றிய நீடித்த பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில், ஒரு புதிய குறும்படமும் மின்னிலக்கத் தடமும் வடிவமைக்கப்பட்டுள்ளனன.

உள்ளூர்த் திரைப்படத் தயாரிப்பாளரான ராய்ஸ்டன் டானின் படைப்பான இந்த ஐந்து நிமிடக் குறும்படம், திரு லீ ஆற்றிய உரைகளின் முக்கிய அம்சங்களின் தொகுப்பாகும்.

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் அமைந்துள்ள ‘செமாங்காட் யாங் பாரு: ஒரு புதிய சிங்கப்பூர் உணர்வை உருவாக்குவோம்’ கண்காட்சியிலும் சிங்கப்பூர் வரலாற்றுக் காட்சிக்கூடத்தின் போருக்குப் பிந்திய சிங்கப்பூர் பகுதியிலும் மின்னிலக்கத் தடம் அமைந்துள்ளது.

மின்னிலக்கத் தடத்தில் தொடர்பு மையங்கள் உள்ளன. ‘செமாங்காட் யாங் பாரு: ஒரு புதிய சிங்கப்பூர் உணர்வை உருவாக்குவோம்’ கண்காட்சியில் உள்ள தொடர்பு மையங்கள் திரு லீயின் வாழ்க்கை மரபு, விழுமியங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

அவரது வாழ்க்கை, பணிகள், சிந்தனைகள், செயல்பாடுகள் ஆகியவை நம் நாட்டை எப்படி வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசென்றன என்பதையும் அவை ஆராய்கின்றன.

தடத்தில் உள்ள தடயங்களைப் பின்தொடர்ந்து சென்று தொடர்பு மையங்களைத் தேடி, அவற்றை அடைந்தவுடன் கைத்தொலைபேசியின் புகைப்படக்கருவியைப் பயன்படுத்தி ஒவ்வொரு பொருளையும் ஒளிவருடல் செய்யலாம்.

மின்னிலக்கத் தடத்தை நிறைவுசெய்தபின், முதல் மாடியில் சிங்கப்பூர் வரலாற்றுக் காட்சிக்கூட வெளிவாயிலில் உள்ள விநியோக இயந்திரத்திலிருந்து வெகுமதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் முதல் 200 பேருக்கு மட்டுமே வெகுமதி கிடைக்கும்.

திரு லீ பிறந்து 2023ஆம் ஆண்டுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை கொண்டாடவும் சிங்கப்பூரின் தேசிய தினத்தை கொண்டாடவும் முகப்பு ஒளியூட்டு நிகழ்விற்கு சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜூலை 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை பொதுமக்கள் ஒளியூட்டைக் காணலாம்.

dhurga@sph.com.sg

குறிப்புச் சொற்கள்