இரும்பு, சுண்ணாம்புச் சத்துகள் நிறைந்த முருங்கை

இரும்பு, சுண்ணாம்புச் சத்துகள் நிறைந்த முருங்கை

3 mins read
3f7ae218-605d-4112-96dd-0fc6bbfaa8a3
முருங்கைக்காய், கீரை, பூ மூன்றையும் நாள்தோறும் சாப்பிடலாம். - படம்: இணையம்

முருங்கா என்று இன்று உலகெங்கும் பிரபலமாகி உள்ள ரத்தப் பற்றாக்குறையிலிருந்து, எலும்புகள் வலுவிலிருந்து, எலும்புகளை மேம்படுத்துவதிலிருந்து, எலும்புகளுக்கு ஊடாக இருக்கக்கூடிய ரத்தத் தட்டுக்களை உற்பத்தி பண்ணுவதிலிருந்து மிகச்சிறந்த பலனைத் தருவது முருங்கை.

முருங்கைக் காய், கீரை, பூ, வேர், பிசின் என்று அதன் ஒவ்வொரு பாகத்திலும் பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன.

நூறு கிராம் முருங்கைக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் ஐநூறு மில்லிகிராம் அளவு கால்சியம் கிடைக்கும்.

எப்போதுமே இயற்கையான உணவு மூலங்களிலிருந்து பெறக்கூடிய சுண்ணச்சத்து உடம்பை எந்த வகையிலும் பாதிக்காது, உடம்பில் எங்கும் போய் சேர்மானம் ஆகாது. செயற்கையான கால்சியம் மாத்திரைகளால் பல்வேறு விதமான பக்கவிளைவுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. கால்சிய மாத்திரைகள் அளவுக்கு மீறும் பொழுது அது உடம்பில் சேர்ந்து சில நேரங்களில் சிறுநீரகக் கற்கலாக உருவெடுக்கலாம்.

பாலைவிட 17 பங்கு அதிகமாக கால்சியம் என்னும் சுண்ணாம்புச்சத்து முருங்கைக்கீரையில் உள்ளது.

முருங்கைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் எலும்பு நல்ல வலுவாகும், எலும்புகளுக்கு உள்ளே இருக்கக்கூடிய மஜ்ஜை மிக அதிக அளவு உருவாகும். முருங்கைக்கீரைக் கஞ்சியை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர முதுகு எலும்பு வலுவாகும்

முருங்கைக்கீரையில் தேவையான அளவு இரும்புச் சத்தும் உள்ளது.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையுடன் மூன்று மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறெடுத்து பச்சையாக அந்த சாறை விடாமல் பத்துநாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்த அளவு அதிகமாக சிவப்பணுக்கள் அளவு அதிகமாகும். முருங்கைக்கீரை என்பது உடம்பில் இருக்கக்கூடிய ஒவ்வாமையை முழுமையாக அகற்றக்கூடிய தன்மை உள்ளது.

முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிடலாம். மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, சிறிது உளுந்து சேர்த்து அரைத்த பொடியுடன் முருங்கைக்கீரையும் சேர்த்து நன்றாக அவித்து சாறு எடுத்து பருகி வந்தால் கைகால் வலி, உடம்புவலி, மூட்டுவலி, கழுத்து வலி போன்ற எல்லா நோய்களும் தீரும்.

அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தும், அளவுக்கு அதிகமான கால்சியமும் முருங்கைக்கீரையில் இருப்பதால் சிலருக்கு முருங்கைக்கீரை செரிமானமின்மையை ஏற்படுத்தும்.

சிலருக்கு முருங்கைக்கீரை சாப்பிட்டால் வயிறு வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். சிலருக்கு வாந்தி ஏற்படும். எனவேதான் எந்தக் கீரையும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது.

கீரை எளிதில் செரிமானமாகாது, ஆனால் மிக எளிய உணவு.

முறுங்கைக் கீரையில் இரும்பு, சுண்ணாம்புச் சத்துகள் மிக அதிகமுள்ளன.
முறுங்கைக் கீரையில் இரும்பு, சுண்ணாம்புச் சத்துகள் மிக அதிகமுள்ளன. - படம்: இணையம்

ஒருவர் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொன்னால் மிக எளிமையாக கீரையை வைத்து குறைக்க முடியும். குறைவான கலோரி உள்ள உணவு கீரை. நூறு கிராம் முருங்கைக்கீரையில் 60 கலோரி இருக்கும்.

ஆண்மையை அதிக அளவு வலுப்படுத்தக்கூடிய தன்மையும் இக்கீரைக்கு உண்டு.

ஒரு சிலர் மிகவும் ஒல்லியாக இருப்பார்கள், பற்கள் தெளிவில்லாமல் ரத்தம் வந்துகொண்டே இருக்கும், அதே போல் ஆண்மை சக்தி குறைவாக இருக்கும், குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்கும் என்றால் முருங்கைப் பூவை அன்றாடம் ஒரு கைப்பிடியளவு எடுத்து பாலில் சேர்த்து வேகவைத்து அதை வடிகட்டி அதில், இரண்டே இரண்டு இதழ் குங்குமப்பூவை சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருகும், உயிரணுக்கள் பெருகும்.

முருங்கைப்பூவை துவையல் செய்யலாம்.முருங்கைப்பூ, வெள்ளரி விதை, பூசணி விதை, காய்ந்த மிளகாய், சிறிது கசகசா அனைத்தையும் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.

குறிப்புச் சொற்கள்