வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி அச்செயலியில் காணொளி செய்திகளைப் பதிவுசெய்து அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பிவைக்கலாம்.
அந்தக் காணொளிப் பதிவுகள் 60 நொடிகள் வரை நீளமாக இருக்கலாம்.
வாட்ஸ்அப் உரிமையாளரான மெட்டா ஜூலை 27ஆம் தேதி வெளியிட்ட பதிவில், “காணொளியில் வெளியிடப்படும் உணர்வுகளைக் கொண்ட தருணங்களைப் பகிர்வதற்கான மகிழ்ச்சியான வகையாக இது அமையும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டது.
குரல் பதிவுகளை எப்படி பயனாளர்கள் அனுப்புகின்றனரோ, அதேபோல இப்புதிய அம்சம் அமையும் என்று மெட்டா கூறியது.
காணொளிச் செய்தியை அனுப்ப, குரல் பதிவு சின்னத்தைப் பயனாளர்கள் தட்டலாம். அப்போது அச்சின்னம் காணொளி முறைக்கு மாறும்.
வாட்ஸ்அப் செயலியில் இப்புதிய அம்சத்தைத் தான் நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்த மெட்டா, வரும் வாரங்களில் இது அனைவருக்கும் கிடைக்கப்பெறும் என்று கூறியுள்ளது.


