புதுப்புது இடங்களுக்குச் சென்று வித்தியாசமான அனுபவங்களைப் பெறவும், இயற்கையை ரசிக்கவும், மற்ற கலாசாரங்களைத் தெரிந்துகொள்ளவும், ஓய்வெடுக்கவும் மக்கள் சுற்றுலா செல்வார்கள்.
ஆனால், இப்போது சமூக ஊடகங்களில் விருப்பக்குறிகளைப் பெறுவதற்காகவும் புகழ்பெறவும் சிலர் உகந்த தங்கும் வசதி இல்லாத, ஆபத்துமிக்க இடங்களுக்குச் சுற்றுலா செல்கின்றனர்.
தங்கும் வசதி, உணவுகள் இல்லாததைப் பற்றி கவலை இல்லாமல் தற்போது ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வித்தியாசமான இடங்களை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அதில் சில இடங்கள் இதோ:
‘டெத் வேலி’ கலிஃபோர்னியா, அமெரிக்கா
உலகின் ஆக வெப்பமிக்க இடமாகக் கருதப்படும் இடங்களில் ஒன்று டெத் வேலி.
அங்கு பொதுவாக வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
அட்டகாமா பாலைவனம், சிலி
உலகின் ஆக வறண்ட பாலைவனம் அட்டகாமா பாலைவனம்.
அப்பகுதியில் பல ஆண்டுக்காலமாக மழை பெய்ததில்லை.
செர்னோபில், உக்ரேன்
அணுவுலை விபத்து நடந்த செர்னோபில் பகுதியில் சில குறிப்பிட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்த அந்த நகரம் இப்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாம், நேப்பாளம்
நேப்பாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமைக் காண சுற்றுப்பயணிகள் பலரும் விரும்புகின்றனர்.
மிகவும் குளிரான, கடல்மட்டத்தில் இருந்து உயரமாக உள்ள இந்த இடம் மிகவும் ஆபத்தானது. உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த இடத்தைத் தவிர்ப்பது நல்லது.
அண்டார்டிகா
பெரும்பாலான நேரங்களில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழ் உள்ள அண்டார்டிகா கண்டத்தைக் காண பலருக்கும் விருப்பம் உண்டு.
அங்கு செல்ல பிரத்தியேகமாக பயணத்திட்டங்கள்கூட உள்ளன. அண்டார்டிகாவில் வெப்பநிலை சாதாரணமாக -89 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.
டனாகில் டிப்ரசன், எத்தியோப்பியா
அதுபோக, அவ்வட்டாரத்தில் எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். அங்கு பொதுவாக வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
‘தி ஸ்கெலிட்டன் கோஸ்ட்’, நமிபியா
பாலைவனமும் கடலும் சேரும் இடமான ‘தி ஸ்கெலிட்டன்’ கடலோரப் பகுதி மிகவும் அழகான இடங்களில் ஒன்று.
இருப்பினும், கடுங்குளிர், வெப்பம், பெரிய அலைகள் போன்றவை அந்த இடத்தை ஆபத்தான இடமாக மாற்றியுள்ளன.

