நாளும் ஒரு செவ்வாழை

1 mins read
ff212caa-27ca-4115-8cd5-b6577711533f
சத்து நிறைந்த செவ்வாழை - படம்: இணையம்

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் கொண்டது செவ்வாழைப்பழம். இப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மெக்னீஷியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் என பல வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன. 

முக்கியமாக இது ரத்த உற்பத்திக்கு உதவுகிறது, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. 

சிறுநீரகப் பிரச்சினைகளை சரிசெய்கிறது, சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. குடல் இயக்கத்தை சீராக்குகிறது. மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும். 

கல்லீரல் செயல்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

ஆண்மை குறைபாட்டிற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. கண் பார்வைக்கும் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நரம்புத் தளர்ச்சி உடையவர்களுக்கு செவ்வாழைப்பழம் நல்லது அறிவுறுத்துவதுண்டு. 

பொதுவாக உணவு சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடக்கூடாது. இரண்டு உணவு வேளைகளுக்கு இடையே காலை 11 மணி, மாலை 4 மணி போன்ற நேரங்களில் சாப்பிடலாம். இரவு உணவை உண்டபின் ஒரு சில மணி நேரத்திற்குப் பிறகு செவ்வாழைப்பழம் சாப்பிடலாம். 

எனினும் இப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால் நீரிழிவு நோய் பிரச்சினை உள்ளவர்கள் இப்பழத்தை அடிக்கடி சாப்பிடக் கூடாது.

பொதுவாகவே வாழைப்பழத்தில் நிறைய நார்ச்சத்து மற்றும் நிறைய சர்க்கரை நிரம்பி காணப்படுகிறது. அதனால் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடுவோருக்கு உடல் எடை கூடும் வாய்ப்புகள் உண்டு.

தொடர்புடைய செய்திகள்

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் வயிற்று வலி மற்றும் வாயு பிரச்சனை ஏற்படுகிறது.

குறிப்புச் சொற்கள்