தேசிய மரபுடைமை நிலைய நிகழ்வுகள்

சிங்கப்பூரின் தேசிய அடையாளம், கடந்து வந்த பாதை உள்ளிட்டவற்றைக் கொண்டாடவும் , தேசத்தின் எதிர்காலக் கனவுகள், திட்டங்களை நினைவூட்டவும் தேசிய மரபுடைமை நிலையம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேசிய தின ஒளி விழா 2023

நாள்: 1 – 26 ஆகஸ்ட் 2023

*சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் ஆகஸ்ட் 9, 2023 வரை மட்டும்

நேரம்: நாள்தோறும் இரவு 7.30 - 12 மணி

தேசத்தின் 58 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிங்கப்பூர் குழந்தைகள் அரும்பொருளகம், ஃபோர்ட் கேனிங், மெகய்ன் அபத் சினகாக் (Maghain Aboth Synagogue), சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், செயின்ட் ஜோசப் தேவாலயம், பெரனக்கான் அரும்பொருளகம் ஆகிய ஆறு கலை, கலாசார அடையாளங்கள் தேசியக் கொடியின் நிறங்களான சிவப்பு வெள்ளை வண்ண விளக்கொளிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் இரவு விழா 2023

நாள்: 18 - 26 ஆகஸ்ட் 2023

இடம்: பிராஸ் பாசா, பூகிஸ் வளாகம்

“சிங்கப்பூர் - சிறந்த துறைமுக நகரம்” என்ற கருப்பொருளுடன் பிராஸ் பாசா, பூகிஸ் வளாகத்தை ஒளிரச் செய்யும் இரவுத் திருவிழா நடைபெறுகிறது.

இவ்விழா ஏறத்தாழ 700 ஆண்டுகளாக நடக்கும் வர்த்தகப் பரிமாற்றத்தின் செழுமையான வரலாற்றை சமகால அனுபவங்களுடன் இணைத்து, சிங்கப்பூரின் பரிணாம வளர்ச்சியையும், துறைமுக நகரமாக அதன் ஆரம்பப் பங்கைத் தாண்டி நவீன பெருநகரமாக மாறுவதையும் எடுத்துக்காட்டுகிறது.

சிங்கப்பூர் இரவு விழா 2023: செயின்ட் ஜோசப் தேவாலயம்

நாள்: 18, 19, 25 ,26 ஆகஸ்ட் 2023

நேரம்: இரவு 7.30 - 8.30

இடம்: செயின்ட் ஜோசப் தேவாலயம்

சிங்கப்பூரின் மிகப் பழமையான கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றான விக்டோரியா தெருவில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தைப் பார்வையிடலாம்.

அந்த தேவாலயத்தின் தனித்துவமான போர்த்துக்கீசிய, யூரேசிய பாரம்பரியத்தையம், பிரமிக்க வைக்கும் கட்டடக்கலை பற்றியும் அறிந்துகொள்ளவும் வாய்ப்பாக இந்நிகழ்வு அமைகிறது.

செமங்கட் யாங் பாரு கண்காட்சி

நாள்: 21 ஏப்ரல்- 29 அக்டோபர் 2023

செமங்கட் யாங் பாரு கண்காட்சி, 1950, 1970 களுக்கு இடையில் சிங்கப்பூரின் தலைவர்களும் மக்களும் ஒன்றிணைந்து தேசத்தைக் கட்டியெழுப்பியதைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகம், தேசிய அரும்பொருளகம் இணைந்து வழங்கும் இந்த சிறப்புக் கண்காட்சியில், பேருந்துப் பயணங்கள், சிறப்புத் திரையிடல்களைக் காணவும், உரையாடல்களில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

தமிழ் இளையர் விழா 2023

நாள்: 2 - 10 செப்டம்பர் 2023

இடம்: சிங்கப்பூரின் பல்வேறு இடங்கள்

தமிழ் மொழிப் பேரவை சார்பில் 35 வயதுக்குட்பட்ட மாணவர்கள், இளைஞர்களை இலக்காகக் கொண்டு பல்வகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இளைஞரிடம் தமிழ் மொழி, சமூகம் சார்ந்த ஆர்வத்தைத் தூண்ட இது நல்ல தளமாக அமைகிறது.

இந்திய மரபுடைமை நிலைய சிறப்புச் சுற்றுலா

நாள்: 16 செப்டம்பர் 2023

நேரம்: காலை 10.30 - 12 மணி

இடம்: இந்திய மரபுடைமை நிலையம்

இந்தச் சுற்றுலா, நமது பல்லின, பல கலாசார சமூகத்தில் சிங்கப்பூர் இந்திய கலாசாரங்களின் தனித்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், புதிய குடிமக்கள், சிங்கப்பூரர் அல்லாதோர், சிங்கப்பூர் இந்தியக் கலாசாரத்தின் தனித்துவத்தைப் பாராட்ட விரும்பும் அனைவருக்கும் ஏற்ற கல்விப் பயணமாக அமைகிறது.

சாங்கி தேவாலய அரும்பொருளகம்

இடம்: 1000 அப்பர் சாங்கி சாலை வடக்கு

நேரம்: நாள்தோறும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை (செவ்வாய் முதல் ஞாயிறு வரை)

சாங்கி தேவாலய அரும்பொருளகம், ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது சாங்கி சிறைச்சாலை முகாமில் அடைக்கப்பட்டிருந்த போர்க் கைதிகள், பொதுமக்களின் கதையைச் சொல்கிறது.

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தால் நிர்வகிக்கப்படும் இந்த அரும்பொருளகத்தில், சாங்கிச் சிறைச்சாலையின் முன்னாள் பயிற்சியாளர்களின் குடும்பங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கதைகள், தனிப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பயிற்சியாளர்கள் அனுபவித்த சிரமங்கள், அவற்றை எதிர்கொள்வதில் இருந்த துணிவு, பின்னடைவு ஆகிய அனைத்தையும் சிந்திக்க பார்வையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் சந்து பிரதிபலிப்புகள்

நேரம்: நாள்தோறும் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை (செவ்வாய் முதல் ஞாயிறு வரை)

இடம்: 31-கே பெப்பிஸ் சாலை

புக்கிட் சந்து பிரதிபலிப்புகள் பாசிர் பஞ்சாங் போரையும், போரிட்ட மலாய் படைப்பிரிவின் ஆட்களையும் புக்கிட் சந்துவின் வரலாற்றையும் நினைவுபடுத்துகிறது.

தளத்தின் வரலாற்றுடன் நெருக்கமான ஒரு பங்களாவில் அமைந்திருக்கும் இந்த விளக்க மையம், புக்கிட் சந்து, பாசிர் பஞ்சாங்கில் பன்முக சமூகத்தைப் பிரதிபலிக்கும் விதமாகவும், தேசத்தின் போர்க்கால அனுபவத்தையும், துணிச்சலான தியாகத்தைக் கோடிட்டுக்காட்டும் கலைப் பொருட்களையும் காண முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!