புகழ்பெற்ற நடிகரும் அரசியல்வாதியுமான காலஞ்சென்ற எம் ஜி ராமச்சந்திரனைப் (எம்ஜிஆர்) பற்றிய நூல்கள் இரண்டு சிங்கப்பூரில் வெளியீடு காண இருக்கின்றன.
வருகிற ஞாயிற்றுக்கிழமை 20 ஆகஸ்டு 2023 மாலை 6 மணியளவில், எண் 430 சிராங்கூன் சாலையில் இருக்கும் சந்திரமகால் உணவகத்தின் இரண்டாம் தளத்தில், எம்ஜிஆர் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ள அந்த நூல்கள் வெளியீடு காண்கின்றன.
தமிழகத்தில் நீண்டகாலமாக இதயக்கனி என்கிற மாத இதழை நடத்திவரும் இதயக்கனி விஜயன் இந்த நூல்களை எழுதியுள்ளார்.
தாரகை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் மாடர்ன் மான்டிஸோரி இன்டர்நேஷனல் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சந்துரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். திரு அருமைச்சந்திரன் பிபிஎம் தலைமை உரை ஆற்ற, தாரகை இலக்கிய வட்டத் தலைவி அப்துல் லத்தீப் மஹாஜபீன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
திரு கற்பூர சுந்தரபாண்டியன் ஐஏஎஸ் வாழ்த்துரை வழங்குகிறார். திருமதி இசக்கி செல்வி நூலை அறிமுகம் செய்கிறார். திரு யூசுப் ரஜித் அவர்கள் ஏற்புரை வழங்க திரு இதயக்கனி விஜயன் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். எம்ஜிஆரின் பெருமைகளை நினைவுகூரும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

