தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு மெய்நிகர் பயணம்

2 mins read
0431fed8-1075-4936-b392-bd5641fe6143
-

தெற்காசியாவிலேயே நூலகம், ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான நிறுவனமாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (RMRL) செயல்பட்டு வருகிறது.

1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நூலகம் 500,000 ஆவணச் சேகரிப்புகளைக் கொண்டுள்ளது. தமிழர் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் முக்கிய அம்சங்களைப் பிரதிபலிக்கும் சேகரிப்புகள், ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவில் உலகின் மிகப்பெரிய களஞ்சியமாக இது திகழ்கிறது.

நூலகத்தின் முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று தமிழ் அச்சு ஆவணங்களைப் பேணிப் பாதுகாத்தல் ஆகும். இந்நிலையில் ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு மெய்நிகர் பயணம் (தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம்)‘ என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸூம் தளம் வழியாக நடைபெறும் இந்நிகழ்வில் ஆவணக் காப்பாளரும் ஆய்வாளருமான சுந்தர் கணேசன் பங்கேற்க உள்ளார். உள்ளூர் கலைஞர் வடிவழகன் நெறியாளராக இருக்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர் வரும் சனிக்கிழமையன்று பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை இந்த இணைப்பில் இணையலாம்: சந்திப்புக்கான முகவரி (ID): 982 1392 4951, மறைச்சொல்: 126548

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையை நிறுவியவர்களில் திரு சுந்தர் கணேசனும் ஒருவர். தமிழ்நாடு அரசு உருவாக்கிய மாநில நூலகக் குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் இவர், தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆவணங்களைச் சேகரித்து, தற்போது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை உள்ளடக்கிய களஞ்சியமாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தை உருவாக்கி உள்ளார்.