தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவிஞர் நெப்போலியனின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா

1 mins read
7e4766e6-d7af-4429-bee4-d7bccccc7f63
‘புல்வெட்டி’ கவிதை நூல். - படம்: நெப்போலியன்
multi-img1 of 2

சிங்கப்பூர் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான நெப்போலியனின் இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள அஞ்சப்பர் உணவகம், நிகழ்வரங்கில் (மாடியில்) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. 

‘இரைக்கு அலையும் நிகழ்’, ‘புல்வெட்டி’ எனும் நெப்போலியனின் இரு கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் மாடர்ன் மாண்டிசோரி இன்டர்நேஷனல் குழுமத் தலைவர் டாக்டர் டி. சந்துரு, இந்திய மரபுடைமை நிலையத் தலைவர் ரா.ராஜாராம் , முஸ்தபா தமிழ் அறக்கட்டளைத் தலைவர் மு.அ.முஸ்தபா, ஜோஸ்கோ ஜி எஸ் ஏ டிராவல்ஸ் நிறுவனர் நாகை தங்கராசு மற்றும் சிங்கப்பூர் தமிழ் கலை இலக்கியப் பிரமுகர்களும் படைப்பாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொள்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்