செயற்கை நுண்ணறிவுதான் எதிர்காலம்: சுந்தர் பிச்சை

தற்காலத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாக செயற்கை நுண்ணறிவு இருக்கும் என்று கூகல் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 

கூகலின் 25 ஆண்டு நிறைவையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கணினியில் இருந்து ஸ்மார்ட்ஃபோனுக்கு மாறிய தொழில்நுட்பத்தைவிட, இணையத்தைவிட இது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.

தேடுதல் மூலமாக கூகல் பணம் ஈட்டுவதற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தலாகவும் இருக்கலாம். 

தற்போது இரு முறைகளில் தேடல் நிகழ்கிறது. ஒரு கேள்விக்கு விடை தேடும்போது, கூகுள் போன்ற தேடுபொறிகளில் நேரடி விடை கிடைக்கும், இல்லையெனில் அதுகுறித்த அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று பதிலைக் கண்டறிந்து காண்பிக்கும். 

பல செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் சாட் ஜிபிடி(ChatGPT) இதனை ஒரே படிநிலையாகக் குறைக்கிறது. உடனடியாகப் பதில் அளித்து தேடல் செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது.

இது மனிதனின் வேலைகள் பலவற்றை தேவையற்றதாக்கும். உதாரணமாக செயற்கை நுண்ணறிவு, மருத்துவம், சட்டம் என பல துறைகளில் துல்லியமாகச் செயல்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவன ஊழியர்களிடம் மட்டுமின்றி லாரி ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள் போன்றவர்களிடமும் இத்தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொழில்நுட்பத்தின் அடிப்படை மறுசீரமைப்பு, மனித புத்தி கூர்மையின் நம்பமுடியாத வளர்ச்சி ஆகும்.

செயற்கை நுண்ணறிவை அனைவருக்கும் மிகவும் உதவிகரமாக மாற்றுவதும், அதை பொறுப்புடன் பயன்படுத்துவதும், அடுத்த 10 ஆண்டுகளுக்கும் அதற்கு அப்பாலும் எங்கள் பணியை நிறைவேற்றுவதற்கான மிக முக்கியமான வழியாகும் என்று திரு சுந்தர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் சிக்கல்கள், அபாயங்களை பற்றிக் குறிப்பிட்ட திரு சுந்தர், “எந்தவொரு ஆரம்பகால தொழில்நுட்பத்தைப் போலவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் சிக்கல்களையும் அபாயங்களையும் ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம். இதன் வளர்ச்சியும் பயன்பாடும் இந்த அபாயங்களை நிவர்த்தி செய்ய வேண்டும், மேலும் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் மேம்படுத்த உதவ வேண்டும்,” என்றார்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவர்களாக இருந்த​அமெரிக்க கணினி அறிஞர்களான லாரி பேஜ், செர்ஜி பிரின் இருவரும் 1998 செப்டம்பர் 4ல் கூகலை நிறுவினர். தற்போது அல்ஃபாபெட் குழுமத்தின் ஒரு பகுதியாக உள்ள கூகலை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நடத்துகிறார்.

“லாரியும் செர்ஜியும் 25 ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் தகவல்களை ஒழுங்கமைத்து அதை உலகளவில் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதே கூகலின் இலக்கு எனக் கூறினர். அவர்கள் உருவாக்கிய கூகுள் தேடல், உலகெங்கிலும் உள்ள பில்லியன்கணக்கான மக்கள் தங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பெற உதவியது,” என்று பிச்சை கூறினார்.

கூகல்  நிறுவனம் 2000 ஆண்டுகளில் இருந்து இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து அதனை முதன்மையாக பயன்படுத்தியும் வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முதன்மை நிறுவனமாக அது உள்ளது என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!