‘ஆப்பிள்’ சாதனங்கள் வைத்திருப்பவர்கள் அவர்களின் மென்பொருளை மேம்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் பழைய மென்பொருள் உள்கட்டமைப்பில் இரண்டு பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதன் மூலம் எளிதாகப் பயனீட்டாளர்களின் தகவல்கள் திருடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய மென்பொருள் மேம்பாட்டால் இந்த இரண்டு பிரச்சினைகளும் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
‘ஆப்பிள்’ சாதனங்களான ஐ-போன்கள், ஐபேடுகள், மேக் கணினிகள், மடிக்கணினிகள், ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை மென்பொருள் மேம்பாடு செய்ய வேண்டும்.
கனடாவில் உள்ள ‘சிட்டிசன் லேப்’ அந்த பிரச்சினைகளைக் கண்டறிந்தது.
‘பேகசுஸ்’ எனப்படும் வேவு பார்க்கும் மென்பொருள் பயனீட்டாளர்களின் அனுமதி இல்லாமலேயே சாதனங்களில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
அதன் மூலம் ‘ஆப்பிள்’ சாதனங்களில் உள்ள தனிநபர் தகவல்கள், படங்கள், காணொளிகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் போன்ற அனைத்து தகவல்களும் திருடப்படும் சாத்தியம் அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
அதுமட்டுமில்லாமல் ‘பேகசுஸ்’ மென்பொருளால் அருகில் உள்ள மற்ற சாதனங்களில் பேசப்படும் ஒலிகளைப் பதிவு செய்ய முடியும்.
ஆப்பிள் நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களை புதிய மென்பொருளைப் பயன்படுத்தி சாதனங்களை மேம்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.
சாதனத்தை மேம்படுத்தும் முறை:
settings > general > software update > enable automatic updates என்பதை பின்பற்றி சாதனத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.

