பார்வையாளர்களைத் தார்மீக முடிவெடுக்கத் தூண்டும் ‘ஹேங்மென்’

பார்வையாளர்களைத் தார்மீக முடிவெடுக்கத் தூண்டும் ‘ஹேங்மென்’

1 mins read
1b42ba25-e7be-4660-8c65-1c4c9e48f1df
தமிழிலும் ஆங்கிலத்திலும் அவாண்ட் நாடகக் குழு ‘ஹேங்மென்’ என்ற நாடகப் படைப்பை அரங்கேற்றுகிறது. - படம்: அவாண்ட் தியேட்டர்

தூக்கில் இடுபவர் ஒருவரின் மனதை அறிந்திடச் செய்கிறது, இருமொழி நாடக நிறுவனமான அவாண்ட் நாடகக் குழுவின் புதிய படைப்பு.

‘ஹேங்மென்’ என்ற நாடகம், சட்டரீதியாக ஓர் உயிரைக் கொல்வதில் அடங்கியுள்ள தார்மீக விளைவுகள் குறித்து கேள்வி எழுப்புகிறது.

பலராலும் பேசப்படாத ஒன்றைப் பற்றி நகைச்சுவை கலந்து சொல்லும் பாணியை இந்தப் படைப்பில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம். தூக்கிலிடுபவராக வரும் கதாபாத்திரம் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டு தொடர் கொலையாளி ஒருவருடன் உரையாடுவதாக நாடகம் அமைந்துள்ளது.

ஒன்றரை மணி நேர நாடகத்தில் பார்வையாளர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. நாடகத்தின் கதாபாத்திரங்கள் தார்மீக முடிவெடுப்பதில் பார்வையாளர்கள் உதவலாம்.

பார்வையாளர்களே கதாபாத்திரங்களாக மாறும் தன்மையை அளிக்கும் வகையில் நாடகம் அமைந்துள்ளதாக அவாண்ட் நாடகக் குழுவின் இயக்குநர் க.செல்வா குறிப்பிட்டார்.

இவ்விளையாட்டு முறை வழி சமுதாயத்தில் வாழும் மக்களுக்குள் உள்ள சக்தியைத் தூண்டி உள்ளடக்கத்தின் ஆழ்ந்த பொருளையும் தொடர்பையும் மேலும் நன்கு புரியவைத்து சமுதாயத்தில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றார் அவர்.

இடம்: ஸ்டாம்ஃபோர்டு கலை நிலையம், 155 வாட்டர்லூ ஸ்திரிட்

எம்ஆர்டி: பென்கூலன்/பிராஸ் பாசா

நாள், நேரம்: சனிக்கிழமை, பிற்பகல் 3 மணி (தமிழ்), வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை, இரவு 8 மணி (ஆங்கிலம்)

நுழைவுச்சீட்டுக் கட்டணம்: $35 அல்லது $30 (சலுகை)

மேல்விவரம் அறிய str.sg/iTVK என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்