தேசிய மரபுடைமை நிலைய நிகழ்வுகள்

“கல்ச்சர் ரீ டிஸ்கவர்” தொடர்: இந்திய மரபுடைமை நிலைய சிறப்புச் சுற்றுலா

நாள்: 16 செப்டம்பர் 2023
இடம்: இந்திய மரபுடைமை நிலையம்
நேரம்: காலை 10.30 - 12 மணி

நமது பல்லின சமூகத்தில் சிங்கப்பூர் - இந்திய கலாசாரங்களின் தனித்துவத்தை அறிந்து கொள்ளவும், சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் இந்திய அடையாளம், சமூக விதிமுறைகளின் பன்முகத்தன்மை குறித்த தகவல்களை அறியவும் வாய்ப்பாக இந்தச் சுற்றுலா அமைகிறது.

புதிய குடிமக்கள், சிங்கப்பூரர் அல்லாதவர்கள், சிங்கப்பூர் இந்திய கலாசாரத்தின் தனித்துவத்தைப் பாராட்ட விரும்பும் பார்வையாளர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ளது இந்தச் சுற்றுப்பயணம்.

தீபாவளி ‘ஓபன் ஹவுஸ்’ 2023

நாள்: 14 அக்டோபர் - 12 நவம்பர் 2023
இடம்: இந்திய மரபுடைமை நிலையம்
நேரம்: திங்கள் தவிர, நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

இந்திய மரபுடைமை நிலையத்தின் தீபாவளிக் கொண்டாட்டம். படம்: இந்திய மரபுடைமை நிலையம்

இந்திய மரபுடைமை நிலையத்தின் ஒரு மாதகால தீபாவளிக் கொண்டாட்டத்தில் பாரம்பரிய உணவு, உடை, மாறுபட்ட இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தும் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளவும் உணரவும் வாய்ப்பாக இந்த நிகழ்வு அமைகிறது.

‘செமங்காட் யாங் பாரு’ : பேருந்துப் பயணம்

செமங்காட் யாங் பாரு கண்காட்சி. படம்: சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகம்

நாள்: 18 ஜூன் - 29 அக்டோபர் 2023
நேரம்: காலை 10 - பிற்பகல் 1, பிற்பகல் 1.30 - மாலை 4.30
கட்டணம்: $5

சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகம் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சிங்கப்பூரர்களைக் கண்காட்சிக்கு அழைத்துவர பேருந்துப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கப்பூருக்கு அடித்தளமாகிய பன்முகக் கலாசாரம், துணிச்சல், மீள்திறன் போன்ற மதிப்புகளையும், கொள்கைகளை வெளிப்படுத்தும் கதைகளையும் கேட்டுக்கொண்டே பயணம் செய்வது, காலப்பயணம் மேற்கொள்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

‘செமங்காட் யாங் பாரு’ : புதிய சிங்கப்பூரர் உணர்வு - கலந்துரையாடல்

நாள்: செப்டம்பர், அக்டோபர் 2023

செமங்காட் யாங் பாரு: கண்காட்சி குறித்த கலந்துரையாடல் படம்: சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகம்

சிங்கப்பூரைக் கட்டியெழுப்பும் பயணத்தில் ‘சிறந்த வெற்றிகளின்’ பட்டியலை உருவாக்க முடிந்தால், அது என்னவாக இருக்கும்?

ஒரு நெருக்கடியை ஒன்றாகச் சமாளிக்க சக குடிமக்களின் சக்திகளை எவ்வாறு ஒன்றிணைப்பது?

இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகாண செமங்காட் யாங் பாரு: கண்காட்சியைத் தொடர்ந்து சிங்கப்பூர் சிற்பிகள் நினைவகம் இக்கண்காட்சி குறித்த கலந்துரையாடலை வழங்குகிறது.

இங்கு கண்காட்சி, கலைப்பொருள்கள், கதைகள் உள்ளிட்டவற்றைப் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொள்வதோடு, பல்வேறு விளையாட்டுகள் மூலம் புதிய நண்பர்களைச் சந்திக்கலாம்.

‘செமங்காட் யாங் பாரு’ குறித்து விரிவாக அறிந்துகொள்வதன் மூலம் சிங்கப்பூர் சிற்பிகள் நினைவக வளர்ச்சியில் பொதுமக்களின் ஈடுபாட்டை ஆழமாக்குவதோடு, பார்வையாளர்களின் மாறுபட்ட கண்ணோட்டங்களைப் பற்றி அறிவதும் இக்கலந்துரையாடலின் நோக்கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!