தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரின் மரபுடைமை உணவு வகைகளாக ‘லக்சா ஜோகூர்’, ‘ஓத்தாக் ஓத்தாக்’ அறிவிப்பு

2 mins read
eb23b11f-2aa9-464e-9a33-fb6b63f9c550
மூலிகைகள், கார வகைகளுடன் வேகவைக்கப்பட்ட முட்டைகள் தெலுர் பின்டாங் என அழைக்கப்படுகின்றன. - படம்: கிறிஸ் டான்
multi-img1 of 3

ஜோகூர் பாரு: ஓத்தாக் ஓத்தாக், லக்சா ஜோகூர், தெலுர் பின்டாங் ஆகியவை ஜோகூரின் மரபுடைமை உணவு வகைகளாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மூலிகைகள், கார வகைகளுடன் வேகவைக்கப்பட்ட முட்டைகள் ‘தெலுர் பின்டாங்’ என அழைக்கப்படுகின்றன.

கெட்டியான குழம்பில் வைக்கப்படும் மஞ்சள் நூடல்ஸ் ‘லக்சா ஜோகூர்’ என்று அழைக்கப்படுகிறது.

‘ஓத்தாக் ஓத்தாக்’ உணவு வகை, அரைக்கப்பட்ட மீனை இலையில் மடித்துச் சுடவைத்து பரிமாறப்படுகிறது.

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தைப் பிரதிநிதிப்பதற்காக கூடுதல் உணவு வகைகளைத் தேர்வுசெய்யும் விதமாக, அதன் அரசாங்கம் உணவுப் பட்டியலை ஆராய்ந்து வந்ததாக ஜோகூர் சுற்றுப்பயண, சுற்றுப்புற, மரபுடைமை, கலாசாரக் குழுத் தலைவர் கே.ரவீன் குமார் தெரிவித்தார்.

ஜோகூரில் உள்ள குறிப்பிடத்தக்க உணவு வகைகளில் மீ ரபுஸ், கச்சாங் பூல், லொங்தோங் கெரிங், பிரியாணி காம் உள்ளிட்டவை அடங்கும்.

“நாங்கள் தேர்வுசெய்யும் உணவு வகைகள், பல்வேறு தகுதிக்கூறுகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். தனித்தன்மைவாய்ந்த உணவு வகைகளாகவும் ஜோகூரில் தொடக்கம் கண்டவையாகவும் அவை இருக்கவேண்டும்.

“அந்த உணவு வகைகளை மக்கள் ருசித்தவுடன், அவற்றை உடனடியாக ஜோகூருடன் தொடர்புபடுத்த முடியவேண்டும்,” என்று திரு ரவீன் விவரித்தார்.

கடந்த வாரம் சிலாங்கூர் மாநிலம், ‘சாத்தே’ உணவை அதன் மரபுடைமை உணவாக அரசிதழில் வெளியிடுவதற்கான திட்டத்தை அறிவித்திருந்தது.

மலேசியா முழுவதும் சாத்தே உணவு பரவலாக தயாரித்து விற்கப்பட்டாலும், சிலாங்கூரின் காஜாங் மாவட்டத்தில் அது மிகவும் பிரபலம் என்று சிலாங்கூர் மாநில மரபுடைமை, மலாய் பாரம்பரியக் கழகத்தின் தலைவர் புர்கான் அமான் ஷா கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்