முழு அகராதி, இலக்கணம், கட்டமைப்பு கொண்ட சைகை மொழி

“சைகை மொழியும் ஒரு சாதாரண மொழியை போலத்தான். தனி இலக்கணம் உடையது. அசைவு, உடல் மொழி, பார்க்கும் திசை என ஒவ்வொன்றும் அர்த்தம் உடையது” என்கிறார் விருப்பத்தின் பேரில் சைகை மொழி கற்றுள்ள திரு. வயிரவன் இராமநாதன்.

சிங்கப்பூர் செவிப்புலன் திறன் குறைந்தோர் மன்றம் நடத்தும் சைகை மொழி வகுப்புகள் மூலம் கற்றுக் கொண்டதாகச் சொல்லும் இவர், தற்பொழுது நிறைய செவித்திறன் குறைபாடு உள்ளவர்களிடம் பழக எளிதாக இருப்பதாகச் சொல்கிறார்.

‘உலகெங்கிலும் ஏறத்தாழ 70 மில்லியன் காது கேளாதோர் வாழும் நிலையில், 300 வகையான சைகை மொழி இருக்கின்றன. மற்ற மொழிகளைப் போலவே முழு அகராதி, இலக்கணம், கட்டமைப்பு என அனைத்தும் சைகை மொழிகளுக்கும் உண்டு.

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 23 ஆம் நாளை அனைத்துலக சைகை மொழி தினமாகக் கடைப்பிடிக்கிறது.

வெறும் எழுத்துக்கள், உணர்வு பரிமாற்றங்கள் தாண்டி, சைகை மொழியில் அறிவியல், கணிதம் என அனைத்து பாடங்களிலும் உள்ள தொழில்நுட்ப பதங்களுக்கும் சொற்களஞ்சியம் உள்ளது.

சைகை மொழி வரலாறு: 

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு முறையான சைகை மொழியை உருவாக்கிய முதல் நபர், 16 ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ்-பெனடிக்டைன் துறவியான ‘பெட்ரோ போன்ஸ் டி லியோன்’.

டி லியோன் தனது மடத்தில் பயன்படுத்தப்படும் சைகைகளைத் தழுவி, காது கேளாதவர்களுக்கு தொடர்பு கொள்ள கற்றுக் கொடுக்கும் முறையை உருவாக்கி தற்பொழுது உலகெங்கும் பயன்படுத்தப்படும் சைகை மொழி அமைப்புகளுக்கு வழி வகுத்தார்.

முறையான சைகை மொழியின் வளர்ச்சியின் வாயிலாக செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் அனைத்து விதமான பேச்சு மொழியையும் அணுக முடிகிறது.

உலக மொழிகளின் உச்சரிப்பு, சொல் வரிசை, இலக்கணத்திற்கான வெவ்வேறு விதிகளை பின்பற்றி தொடர்பு கொள்ள வழிவகுக்கிறது.

வயிரவன் கூறுகையில், “பயன்பாட்டில் இருக்கும் சைகை மொழிகளைத் தவிர, அனைத்துலக பொது சைகை மொழியும் உண்டு” என்கிறார்.

அந்த மொழி எளிமைப்படுத்தப்பட்ட இலக்கணத்தையும், குறைக்கப்பட்ட சொல்லகராதியும் கொண்ட மொழி என்பதால், அனைத்துலக கூட்டங்களில் கருத்து பரிமாற்றத்திற்கு இது உதவுகிறது.

சைகை மொழி பயன்பாடு: 

சைகை மொழி கற்ற மற்றொரு இளையரான திரு. அர்ஜுன் வாட்ரேவு, 27, சைகை மொழி வகுப்பில் இணைந்தது தான், வாழ்க்கை முடிவுகளிலேயே சிறந்தது என்கிறார்.

மொழிகளின் மீது இயற்கையாகவே ஆர்வம் கொண்ட இவர், மற்ற மொழிகள் போலவே ஒவ்வொரு சொல்லுக்கும் இடையிலான இடைவெளி, நிறுத்தங்கள், வேர்ச் சொற்கள் என அனைத்து நுணுக்கங்களும் இதற்கும் உண்டு என்பதை நாம் அறிய வேண்டும் என்கிறார்.

ஒரு கலைஞனாக நடனத்தில் வரும் அபிநயங்கள், கை முத்திரைகள் உள்ளிட்ட அழகியல் கூறுகள் இம்மொழிக்கு இருப்பதாக உணர்கிறேன் என்றார். இதுவே என்னை இம் மொழி கற்க உந்தித் தள்ளியது என்றும் சொன்னார்.

இந்த புரிதலை இன்னும் அதிகமாக்க சைகை மொழி வரலாறு, மொழியியல் வகுப்புகளுக்கும் சென்றுள்ள இவர், பிரிட்டிஷ் சைகை மொழி, பிரெஞ்சு சைகை மொழி உள்ளிட்டவற்றைக் கற்றுத் தேர்ந்துள்ளார்.

சைகை மொழிபெயர்ப்பாளராக அனுபவம் பெற்றுள்ள இவர், இசை உள்ளிட்ட கலை வடிவங்களையும் மொழி பெயர்க்கிறார்.

இம்மொழி குறித்து பகிர்ந்துகொண்ட செவிப்புலன், பேச்சுத்திறன் குறைபாடுடைய 59 வயதான திரு. ஜாக்கி, 13 வயதில் சைகை மொழி கற்றதாகச் சொல்கிறார். அக்காலத்தில் சீன சைகை மொழி பிரபலமாக இருந்ததாகவும், பின்னர் எளிமைப்படுத்தப்பட்ட அமெரிக்க பாணி சைகை மொழி வழக்கிலிருப்பதாகவும் கூறினார்.

செவித்திறன் குறைபாடுடையவரும், தெமாசெக் தொழில்நுட்பக் கல்விக் கழக சிறப்புக் கல்வித் தேவை அதிகாரியுமான திரு வின்ஸ்டன், “நான்கு வயதிலிருந்தே தனக்கு செவித்திறன் குறைந்ததாகச் சொல்கிறார். தொடக்கத்தில் சிறிது திறன் இருந்ததால், காது கேட்கும் கருவியின் உதவியோடு பேச்சு மூலம் தொடர்பு கொண்ட இவருக்கு முதலில் சைகை மொழி அவசியமாக இல்லை.

முதலில் உதடு அசைவுகளை வைத்து புரிந்து கொண்ட 35 வயதான இவர், தற்பொழுது ஏறத்தாழ முழு திறனையும் இழந்ததோடு, சைகை மொழியும் பயின்றார்.

சைகை மொழியும், உதடு அசைவும் சேர்த்து தனக்கு உதவுவதாகச் சொல்லும் இவர், சத்தமான சூழ்நிலைகளில் திறன்பேசியில் தட்டச்சு செய்து தொடர்பு கொள்வதாகத் தெரிவிக்கிறார். அலுவல் தொடர்பான கூட்டங்களில் சைகை மொழி பெயர்ப்பாளர் உதவி புரிவதாகவும் சொல்கிறார்.

தன்னை போன்றும், செவிப்புலன், பேச்சுத்திறன் இரண்டும் இல்லாதவரிடமும் பொதுமக்கள் கனிவுடனும் அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

திரு அர்ஜுனும் இவ்வகை திறன் குறைபாடுடையவர்களது வளர்ச்சிக்கு நாம் எவ்வகையிலும் தடையாக இருக்கக் கூடாது எனவும், திரு வயிரவன், குறைபாடுடைய சைகை மொழி பேசுபவர்களை சராசரி வேற்று மொழியினரைப் போன்றே கருத வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!