தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் கவிஞரின் 64வது நினைவுக் கருத்தரங்கம்

1 mins read
c68131ad-fd18-4a11-bb1d-8522d36654f6
மக்கள் கவிஞர் மன்றம் அக்டோபர் 8ஆம் தேதியன்று மக்கள் கவிஞரின் 64வது நினைவுக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. - படம்: மக்கள் கவிஞர் மன்றம்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கம் அக்டோபர் 8ஆம் தேதியன்று தேசிய நூலகத்தின் 16வது தளத்தில் இடம்பெற்றது.

மக்கள் கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர் லலிதா சுந்தர் நெறியாளராக இருந்தார். செல்வன் ரோசன் தமிழ் வாழ்த்து பாடி நிகழ்வைத் துவங்கி வைத்தார்.

மன்றத்தின் துணைத் தலைவர் திருமதி புவனேஸ்வரி மகேந்திரன் தமது  தலைமையுரையில் அனைவரையும் வரவேற்று மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் கவிஞரின்   புகழையும் நினைவுகூர்ந்தார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கல்வியாளரும் எழுத்தாளருமான திரு பொன் சுந்தரராசு கலந்துகொண்டு சிறப்பித்தார். 

திரு நா. ஆண்டியப்பன் தலைமையில் நடந்த ‘பாட்டாலே புத்திச் சொன்னார்’ என்ற கருத்தரங்கத்தில் முனைவர் இராஜி ஸ்ரீநிவாசன், முனைவர் இரத்தினவேங்கடேசன், செல்வி சுருதிலயா மற்றும் செல்வி அருணா கந்தசாமி முறையே தத்துவம், அரசியல் அறம், இயற்கை மற்றும் நாட்டு நலம் ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.

ஆதரவாளர்களுக்கும் நிகழ்வில் பங்கு பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மன்றத்தின் செயலாளர் திரு இராஜாராமின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

குறிப்புச் சொற்கள்