பக்தர்களைப் பரவசப்படுத்திய வெள்ளி ரத ஊர்வலம்

1 mins read
8d3be9a9-0367-4b01-b07d-b8ceccc94a0d
தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் புளோக் 62ல் சனிக்கிழமை மாலை வெள்ளி ரதம் சென்றபோது, ஏராளமான பக்தர்கள் தங்கள் காணிக்கைகளைச் சமர்ப்பித்தனர். - படம்: த. கவி

இவ்வாண்டு தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ மாரியம்மன் வீற்றிருக்கும் வெள்ளி ரதத்தின் இரண்டாம் நாள் ஊர்வலம் சனிக்கிழமை (நவம்பர் 4) சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டது.

முதலில் தெலுக் பிளாங்கா ஹைட்ஸ் புளோக் 62, டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் கோயில், ஹோய் ஃபாட் ரோடு புளோக் 28 டிரைவ் வே, புக்கிட் மேரா வியூ புளோக் 123 ஆகிய இடங்களில் வெள்ளி ரதம் நின்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு நள்ளிரவு வாக்கில் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முதல் நாள் ஊர்வலத்தின்போது, எவர்ட்டன் பார்க் பல்நோக்கு மண்டபம், ஜாலான் புக்கிட் மேரா புளோக் 141, புக்கிட் பெர்மாய் புளோக் 109, தெலுக் பிளாங்கா ரைஸ் புளோக் 29 ஆகிய இடங்களில் வெள்ளி ரதம் நின்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்று ஆலயம் வந்தடைந்தது.

குறிப்புச் சொற்கள்