பார்வை இழந்தவரின் உண்மைக் கதையைச் சித்திரிக்கும் நூல்

பார்வையற்றவரின் உண்மைக் கதையைச் சித்திரிக்கும் சிறுவர் கதை நூல், சிங்கப்பூர் பார்வைக் குறைபாடுள்ளோர் சங்கத்தில் (எஸ்ஏவிஎச்) சனிக்கிழமை நவம்பர் 11ஆம் தேதியன்று வெளியானது.

‘என் பெயர் லிங். எனக்குக் கண் தெரியாது’ எனும் தலைப்பிலான நூல், பிறவியில் பார்வைத்திறன் பெற்றிருந்த, ஆனால் படிப்படியாக பார்வையிழந்த லிங்கின் கதையை விவரிக்கிறது.

சிறுவர் நூல் என்பதால் எதுகை மோனையுடன் எழுதப்பட்டுள்ளது. ‘ஐ எம் யுனிக்’ எனும் தொடரில் வெளியாகும் ஆறாவது நூல் இது.

இதற்குமுன்பு, பெருமூளைவாதம், ஆட்டிசம், ‘டவுன் சிண்ட்ரோம்’, நீரிழிவு நோய், நரம்பியல் நோய் ஆகிய தலைப்புகளில் இத்தொடரில் நூல்கள் வெளியாகியுள்ளன.

பார்வையற்றவரும் படித்துப் பயனடையும்படி இந்நூல் ‘பிரெய்ல்’ வடிவிலும் வெளியாகியுள்ளது. ‘பிரெய்ல்’ அச்சுகள் ‘லைட்ஹவுஸ்’ பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதன்வழி கனிவன்பான சமுதாயத்தை உருவாக்க விரும்புவதாகக் கூறினார் லிங்கின் நண்பரும் இந்நூலின் ஆசிரியருமான லீ சியாவ் சர்.

இந்நூலின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சுகாதாரம் மற்றும் சட்ட அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் கலந்துகொண்டார்.

“நம் சமுதாயத்தில் வெவ்வேறு ஆற்றல்கள் கொண்டோர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியம்,” என்றார் அவர்.

‘கிலவ்கோமா - அமைதியான கண் திருடர்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் கிலவ்கோமா சங்கம் சிறப்புரை ஆற்றியது.

அதன்பின் நூலைப் பார்வையற்றவர் இருவர் ‘பிரெய்ல்’மூலம் படித்துக் காட்டினர்.

நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக, ‘கினபாலு’ மலையில் 25 ஆண்டுகளுக்குமுன் ஏறிய பார்வையற்ற திருவாட்டி ரோசி தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அவரது வழிகாட்டியாகச் சேவையாற்றியவர், இந்நூலின் வெளியீட்டாளரான திருவாட்டி ஹிடாயா.

பார்வைக் குறைபாடுள்ளோர் எதிர்நோக்கிவரும் சவால்கள்

சிங்கப்பூரில் பார்வைக் குறைபாடுள்ளோர் இன்றும் வேலைவாய்ப்புகளில், சமூகத்தில் புறக்கணிப்பைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டார் ‘எஸ்ஏவிஎச்’ தலைவர் டெரிக் ஹாங்.

சிறப்புத் தேவைகள் கொண்டோரில் பார்வைக் குறைபாடுள்ளோருக்கே ஆக அதிகமான வேலையின்மை விகிதம் இருப்பதாகவும் கூறினார்.

அரசாங்கம் வழங்கும் ‘எஸ்ஜிஇனேபல் திறந்த கதவு’ திட்டத்தைச் செயல்படுத்தி வந்தாலும் இந்நிலைமை நீடிப்பதாக வருந்தினார்.

துணைபுரியும் தொழில்நுட்ப நிதி (Assistive Technology Fund) தற்போது சிலவகையான கருவிகளையே உள்ளடக்குவதால் பார்வையற்றோருக்கு உதவக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி மெதுவடைவதாகவும் கூறினார்.

எனினும், சிறப்புக் கல்வி, போக்குவரத்து போன்றவற்றைப் பார்வையற்றவர்களுக்கு உகந்ததாக்குவதில் சிங்கப்பூர் பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகப் பாராட்டினார்.

‘எஸ்ஏவிஎச்’ செயல்திட்டங்கள்

‘எஸ்ஏவிஎச்’ தற்போது பார்வைக் குறைபாடுள்ளோருக்குப் புதிய கணினிப் பயன்பாட்டுச் செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொது, தனியார் இடங்களில் அவர்களது பயணங்களை மேலும் எளிதாக்க சங்கம் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது’.

குறைவான பார்வை மருத்துவமனை, பார்வை மறுவாழ்வுத் திட்டம், துணைபுரியும் கருவிகள் நிலையம், ‘பிரெய்ல்’ நிலையம், பகல்நேரப் பராமரிப்புத் திட்டம் போன்றவற்றையும் சங்கம் கொண்டுள்ளது.

பார்வையற்றவர்கள், உடற்பிடிப்பாளர்களாகவும் பணியாற்றிச் சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறது.

இந்நூலின் விற்பனையில் வரும் பணம், ‘எஸ்ஏவிஎச்’ செயல்திட்டங்களை ஆதரிக்கும். நூலைப் பெற https://savh.org.sg/ தளத்தை நாடலாம்.

‘எஸ்ஏவிஎச்’ நூலகத்தில் ‘பிரெய்ல்’ வடிவ நூலையும் இரவல் பெறலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!