தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘துமாசிக்’ ஆங்கில-தமிழ் சிறுகதை நூல் வெளியீடு

1 mins read
507ca5a6-2e3e-4ce4-8da1-a2a30a60691f
படம்: - தமிழ் முரசு

சிங்கப்பூரின் வரலாற்றையும் சமூகக் கலாசாரத்தையும் பின்னணியாகக் கொண்ட ‘துமாசிக்’ இருமொழி சிறுகதைத் தொகுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) வெளிவருகிறது.

வெவ்வேறு காலக்கட்டங்களையும் வயதுகளையும் சேர்ந்த கதைமாந்தர்களின் பலதரப்பட்ட வாழ்க்கை அனுபவங்களின் குவிப்பாக இத்தொகுப்பு உள்ளது. மூத்த கல்வியாளர் பொன். சுந்தரராசு எழுதியுள்ள இந்த 250-பக்க நூல், பத்து சிறுகதைகளைக் கொண்டுள்ளது.

சங் நீல உத்தமா அரண்மனையை அமைக்கும் காலக்கட்டத்தில் முனைப்புடன் பணியாற்றி பெண்டாஹரா எனப்படும் முக்கிய அமைச்சர், அவரது மகள் உள்ளிட்டோரை மையப்படுத்தும் திகிலூட்டும் கதை ஓட்டம் தலைப்புச் சிறுகதையான ‘துமாசிக்’கில் உள்ளது.

கொவிட்-19 கிருமிப்பரவலைப் பின்புலமாகக் கொண்ட ‘உயிர்ப்பசி’, அட்டைப் பெட்டிகளைச் சேகரிக்கும் மூதாட்டி பற்றிய ‘உயில்’ உள்ளிட்ட கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறுகிறது.

2005ல் எழுதப்பட்ட மாசிக் சிறுகதையை மலேசியாவின் முன்னாள் நாளிதழான ‘தமிழ் நேசன்’ அப்போது பதிப்பித்தது. தொடக்கக்கல்லூரித் தமிழ்த் துணைப்பாட நூலிலும் இந்தச் சிறுகதை இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியின்போது கதை வாசித்தல் அங்கம் இடம்பெறும். முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பிக்கும் இந்நிகழ்ச்சியில் டாக்டர் சுனில் கிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளராக பங்கேற்கிறார்.