அனைத்துலக ஒப்பனைக் கலைஞர்களுக்கான போட்டி

திரையில் தோன்றும் கலைஞர்களின் தோற்றத்தைப் பொலிவுபடுத்தி, அவர்களை மிளிரச் செய்யும் சிறப்பான பணியில் ஈடுபடும் ஒப்பனைக் கலைஞர்களின் திறமையை வெளிக்கொணர அனைத்துலக ஒப்பனைக் கலைஞர்களுக்கான போட்டியை ‘தி சோசன் ஒன்’ எனும் உள்ளூர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாண்டு முதன்முறையாக நடத்தியது.

கடந்த அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் இதற்கான முன்னோட்டப் போட்டி நடைபெற்று, அதன் இறுதிச் சுற்று ஜோகூர் பாருவில் உள்ள அமன்சாரி ரெசிடென்ஸ் ரிசார்ட்டில் இம்மாதம் 4ஆம் நாள் நடைபெற்றது.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பத்துப் போட்டியாளர்கள் கலந்துகொண்ட இறுதிச்சுற்றில் முதல் பரிசு பெற்றார் மலேசிய ஒப்பனைக் கலைஞர் கவினிஷா வின்சென்ட். அவருக்கு 8,888 ரிங்கிட் ரொக்கமும் 5,000 ரிங்கிட் மதிப்புள்ள ஒப்பனைப் பொருள்களும் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்ந்து அவருக்கு ‘தி சோசன் ஒன்’ தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படைப்புகளில் பணியாற்ற வாய்ப்பும் கிடைக்கும் என்றார் அந்நிறுவன இயக்குநரும் நிகழ்வின் ஏற்பாட்டாளருமான அபு கரீம் இஸ்மாயில்.

மலேசியாவைச் சேர்ந்த பிரபல ஒப்பனைக் கலைஞரான கண்ணன் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இப்போட்டியில், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களைச் சேர்ந்த 200 பேரும் பார்வையாளர்களாகப் பல பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 500 பேரும் வந்திருந்தனர்.

மலேசியத் தோன்றெழில் (மாடலிங்), ஒப்பனைத் துறையைச் சேர்ந்த அனிதா அய்யாவு, லாவண்யா பிரியா, உஷா ஆகியோர் நடுவராக பங்கேற்ற இப்போட்டியில் முக ஒப்பனை, படைப்பாற்றல், கருப்பொருள், சிறப்புக் கூறுகள் என அனைத்தையும் கருத்தில்கொண்டு, வெற்றியாளர்களாக மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இரண்டாமிடம் பெற்ற கௌரி குணசேகரன் எனும் கலைஞருக்கு 3,888 ரிங்கிட் ரொக்கமும் 3,500 ரிங்கிட் மதிப்புள்ள பொருள்களும் பரிசாக வழங்கப்பட்டன. மூன்றாம் பரிசுபெற்ற துளசி மோகன் 1,888 ரிங்கிட் ரொக்கத்தையும் 2,500 மதிப்புள்ள பொருள்களையும் பரிசாகப் பெற்றார்.

இதுதவிர பங்குபெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசாக 300 ரிங்கிட் ஒப்பனைப் பொருள்கள் அடங்கிய பெட்டகமும், சான்றிதழும், பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டன.

ரிங்கிட் 120 மதிப்புள்ள நுழைவுச்சீட்டு வாங்கி வந்திருந்த பார்வையாளர்களுக்காக அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்பட்ட, முதல் மூவருக்குத் திறன்பேசியும், அடுத்த மூவருக்கு கைக்கடிகாரமும், அடுத்த 14 பேருக்கு சிறு பரிசுப்பொருள்களும் வழங்கப்பட்டன.

சமூக ஊடகத்தில் தனித்துவமான ஒப்பனைக் காணொளியைப் படைத்ததற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த அலியா ஃபதின் சிறப்புப் பரிசு பெற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!