கலைஞர்களின் திறனில் மக்களை மூழ்கச் செய்யும் ‘கலா உத்சவம்’ நவம்பர் 17 முதல் 26 வரை நடைபெற்று வருகிறது.
நவம்பர் 17ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு ‘ராயலூஷன்’ இந்திய நடன நிகழ்ச்சி, இந்திய (குத்து, கார்பா), மேற்கத்திய நடன வகைகளை இணைத்து கலா உத்சவத்தைத் தொடங்கிவைத்தது.
தொடக்க நாளில் இசைக் கச்சேரிகள், நடனங்கள், சிறுவர்களுக்கான தீபாவளி உடைக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.
பிரபல பாடகர் அர்மான் மாலிக் சனிக்கிழமை (நவம்பர் 18) சிங்கப்பூரில் முதல்முறையாக நிகழ்ச்சி படைத்தார்.

சிங்கப்பூரில் பிரபல இசைக்குழுவான ‘வசந்தம் பாய்ஸ்’ இணைந்து ஞாயிற்றுக்கிழமை இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரின் பாடல்களைத் தங்கள் சொந்த பாணியில் வழங்கினர்.

தொடர்ந்து பல இசை, நாடக, நடன நிகழ்ச்சிகள் கலா உத்சவத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
காவியா வெங்கடேஷ், லயா மஹேஷ், வேதாங்யா நரசிம்மா, ஸ்ரீரஞ்சனி முத்து சுப்பிரமணியன், ரஞ்சனி பாண்டா, அதிதி ஆத்ரேயா, அஹானா போன்ற வளரும் இளங்கலைஞர்களின் இசைநிகழ்ச்சிகளையும் எதிர்பார்க்கலாம்.
தமிழ், தென்னிந்திய இசை இரவுகளையும் பலவித நடனங்களையும் எதிர்ப்பார்க்கலாம்.
‘பச்ச பங்களா ரெட்ட கொலடா’ என்ற நகைச்சுவை நாடகமும் இடம்பெறவுள்ளது.
கலா உத்சவ நிகழ்ச்சி நிரலைக் காண: esplanade.com/kalaautsavam