பாலகிருஷ்ணன் ஹரிபிரியா
‘ஐஸ் மேஜிக்’ பனிப் பூங்கா 3,000 சதுர மீட்டர் பனி மற்றும் பனி நடவடிக்கைகளுடன் திரும்பியுள்ளது!
இங்குள்ள புதிய அனுபவங்களில் ஒன்று, மேரி-கோ-ரவுண்ட்-ஆன்-ஐஸ். எட்டு மீட்டர் அகலம் கொண்ட இந்த ‘கெரோசல்’ சவாரியின் ஒரு பகுதியாக பனி டியூப்பில் சறுக்கலாம்.
கடந்த ஆண்டு 70 மீட்டர் நீளத்துக்கு சறுக்குப் பாதை இருந்தது. இந்த முறை 98 மீட்டர் நீளத்துக்கு சறுக்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நுழைவுச் சீட்டிலும் வாடகைக்கு ஒரு ஜாக்கெட்டும் காலணிகளும் வழங்கப்படும். ஆனால் மறக்காமல் முழுக் கால்சட்டை, கையுறை, காலுறைகளைக் கொண்டு வாருங்கள்.
‘ஐஸ் மேஜிக்’ ஆசியாவின் மிகப்பெரிய சுற்றுப்பயண பாப்-அப் குளிர்கால விளையாட்டுத் தளமாக அமைகிறது.
எங்கே: பேஃபிரண்ட் இவென்ட் ஸ்பேஸ், 12A பேஃபிரண்ட் அவென்யூ
எப்போது: டிசம்பர் 9 - ஜனவரி 21, 3 அமர்வுகள், காலை 10 மணி முதல் மாலை 6.45 மணி வரை
சேர்க்கை: 2 மணி, நேரம் 45 நிமிடங்கள்
கட்டணம்: www.sistic.com.sg/events/icemagicsg2023 இணையப் பக்கத்தில் $19 - $49 (முன்பதிவு கட்டணம் சேர்க்காமல்)
2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்
தகவல்: www.fb.com/IceMagicAsia