தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கும் 21/22ஆம் ஆண்டுகளுக்கான கரிகாற்சோழன் விருதுகள்

1 mins read
c49dc564-9f39-4c8b-b4ce-ca976ed571a7
தமிழ்ப் பல்கலைக்கழகம் - படம்: தமிழக ஊடகம்

தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளைச் சார்பாக 2007ஆம் ஆண்டு தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை நிறுவப்பட்டது.

அந்த அறக்கட்டளையின் வாயிலாக, ஆண்டுதோறும் சிங்கப்பூர் - மலேசியாவைச் சேர்ந்த சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்குக் ‘கரிகாற்சோழன் விருதுகள்’ 2010ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்தன. பின்னர், இலங்கையும் அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 

எதிர்வரும் டிசம்பர் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 3 மணிக்குத் தஞ்சைப் பல்கலைக் கழகப் பனுவல் அரங்கத்தில் விருது வழங்கும் விழா இடம்பெறவிருக்கிறது.

இந்த விழாவில் கீழ்காணும் விருதாளர்கள் கெளரவிக்கப்படவிருக்கின்றனர்.  

2021ஆம் ஆண்டுக்கான விருதுகள்: இளந்தமிழன் (மலேசியா)  - இளந்தமிழன் சிறுகதைகள்; ரமா சுரேஷ் (சிங்கப்பூர்) - அம்பரம் (பிரிவு: புதினம்); சிவ ஆரூரன் (இலங்கை) - ஆதுரசாலை (பிரிவு: புதினம்)

2022ஆம் ஆண்டுக்கான விருதுகள்: எம் கருணாகரன் (மலேசியா) - உள்ளங்கைக் கடவுளும் அஜந்தா பேரழகியும் (பிரிவு: கவிதை); பொன். சுந்தரராசு (சிங்கப்பூர்) - துமாசிக் (பிரிவு: சிறுகதைகள்); நோயல் நடேசன் (இலங்கை) - பண்ணையில் ஒரு மிருகம் (பிரிவு:புதினம்)

புலம்பெயர் தமிழ்ப்  படைப்பாளிகளை உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டுமென்ற உயர்நோக்கத்தில் வழங்கப்படும் ‘கரிகாற்சோழன் விருதுகள்’ தமிழ் இலக்கிய உலகில் தனித்த  மதிப்பையும் உயரிய இடத்தையும் பெற்றுத் திகழ்கிறது என்று கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்