தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறார்களுக்கு சிறந்த விமானப் பயண அனுபவத்தை வழங்க எஸ்ஐஏ முயற்சி

2 mins read
d1c23626-a570-43f0-b07a-e013cd97aec7
திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்தைச் சிறார்களுக்கு வழங்க, குடும்பக் கருப்பொருள் சார்ந்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசைக் காணொளிகள் உள்ளிட்டவற்றை விமானத்தில் காணும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. - படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் / எக்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம், விடுமுறைக் காலத்தில் சிறார்களுடன் விமானப் பயணம் மேற்கொள்வோரின் பயண அனுபவத்தை மேம்படுத்த தமது விமானங்களில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, திரையரங்கில் படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை சிறார்களுக்கு வழங்க, குடும்பக் கருப்பொருள் சார்ந்த திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசைக் காணொளிகள் உள்ளிட்டவற்றை விமானத்தில் காணும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஆங்கிலத் திரைப்படங்களான ‘ஹோம் அலோன்’, ‘ஃப்ரோசன் 2’, ‘பார்பி’, ‘மிஷன்: இம்பாசிபிள் - டெட் ரெக்கனிங் - 1’ என வெவ்வேறு வயதுள்ள சிறார்களுக்கு ஏற்ற விருப்பமான திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

இந்த அனுபவத்தை மெருகூட்ட, சோளப்பொரி, உருளைக்கிழங்கு சீவல், குக்கீஸ் என பல்வேறு தின்பண்டங்களும் வழங்கப்படுகின்றன.

சிறுவயதுக் குழந்தைகளுக்காக ‘டிஸ்னி’ கருப்பொருளில் அமைந்த வண்ணப் புத்தகங்கள், பயணப்பைகளில் பயன்படுத்தப்படும் குறியீட்டு அட்டைகள் (Luggage Tags), அவர்கள் பயண அனுபவம் பற்றி எழுதவும் வரையவும் தேவைப்படும் எழுது பொருள்கள் உள்ளிட்ட சிறிய அன்பளிப்புப் பொருள்களும் வழங்கப்படுகின்றன.

அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களிலும் 1 டிசம்பர் 2023 முதல் சிறுவர்களுக்கான தனித்துவ தலையணி கேட்பொறிகள் (Headphones) வழங்கப்படுகின்றன.

விமானப் பயணத்தின்போது சிறார்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் பொழுதுபோக்காக விளக்கும் ‘ஆக்மெண்டெட் ரியாலிட்டி’ எனும் தொழில்நுட்பமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் பயணம் செய்யும் சிறார்களுக்காக 190 பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தித் தந்துள்ள எஸ்ஐஏ, சிறுவர்களுக்கு எண்ணெய், உப்பு, காரம் குறைவான உணவு, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதுகாப்பாக அமர்த்த பிரத்தியேக இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளையும் செய்து தந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்