டிசம்பர் விடுமுறைக்கு மனதைக் கொள்ளை கொள்ளும் கடற்கரை அழகு

ஆண்டிறுதி விடுமுறையை மகிழ்வுடன் கொண்டாட டெசாரு கடற்கரை தினசரி சிறப்புப் படகுச் சேவையைத் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரின் தானா மேரா படகு முனையத்தையும் டெசாரு கடற்கரைப் படகு முனையத்தையும் இணைக்கும் இந்த 90 நிமிடப் படகுச் சேவை நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி வருகிற ஜனவரி 1ஆம் தேதி வரை இயங்கும்.

ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணி முதல் 10 மணி வரை தானா மேராவிலிருந்து டெசாரு கடற்கரைக்கும் மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திரும்பும் பயணத்திற்கான படகுச் சேவைகளும் இயங்குகின்றன.

இதற்கான கட்டணம் ஒரு நபருக்கு, ஒருவழிப் படகுப் பயணத்திற்கு 70 வெள்ளியும் இருவழிப் பயணத்திற்கு 108 வெள்ளியும் ஆகும். 

கிறிஸ்துமஸ், புத்தாண்டுப் பண்டிகைகளை ஒட்டி டிசம்பர் 23, 25, 30, ஜனவரி 1 ஆகிய நான்கு நாள்களில் மட்டும் கூடுதல் இருவழிப் படகுச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேதிகளில் வழக்கமான படகுச் சேவை நேரத்துடன் சேர்த்து காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை டெசாரு கடற்கரையிலிருந்து தானா மேராவிற்கும் மதியம் 1.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் தானா மேராவிலிருந்து டெசாரு கடற்கரைக்கும் சிறப்புச் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  

டெசாரு கடற்கரையில் பல்வேறு குடும்ப நடவடிக்கைகளும் சுற்றுலா சாகசங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சுற்றுலாத் திட்டங்களுக்கான கட்டணங்கள், இருவழிப் பயணப் படகுச் சேவைகளுக்கான கட்டணங்களுடன் சேர்த்து வழங்கப்படும். 

குடும்பமாகக் குழந்தைகளுடன் மகிழ டெசாரு கடற்கரையில் ‘அட்வெஞ்சர் வாட்டர்பார்க்’, ‘ஸ்பிளாஷ் டே அவுட்’ சுற்றுலாத் தொகுப்புத் திட்டம் உள்ளது.

இதில் 20க்கும் மேற்பட்ட சாகச விளையாட்டுகள் உள்ளன. இருவழிப் பயணப் படகுச் சேவைகளுக்கான கட்டணத்துடன் சேர்த்து இந்த சுற்றுலாத் தொகுப்பிற்கு ஒரு நபருக்கு $112 கட்டணம் ஆகும். 

அதேபோல் ‘அவுட் அட் ஏ ஃப்ரூட் ஃபார்ம்’ எனும் சுற்றுலாத் தொகுப்புத் திட்டத்தில் 180 ஏக்கர் பழவகை சார்ந்த நிலத்தைக் கண்டு ரசிக்கலாம்.

அதோடு சேர்த்து ‘ஏடிவி’ சாகச சவாரியும் செய்யலாம். இருவழிப் பயணப் படகுச் சேவைகளுக்கான கட்டணம், ஒரு வேளை மதிய உணவுடன் சேர்த்து இந்தச் சுற்றுலாத் தொகுப்புத் திட்டத்துக்கு ஒரு நபருக்கான கட்டணம் $131. 

‘அவுட் இன் நேச்சர் மேங்குரோஃப்’ சுற்றுப்பயணம் எனும் தொகுப்புத் திட்டத்தில் மலேசியாவின் தனித்துவமான சதுப்புநில வழிகாட்டுச் சுற்றுலா உள்பட பல்வேறு அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இருவழிப் பயணப் படகுச் சேவைகளுக்கான கட்டணத்துடன் சேர்த்து, இந்தச் சுற்றுலாத் தொகுப்புத் திட்டத்திற்கு ஒரு நபருக்கான கட்டணம் $159.

அதேபோல் கோல்ப் விளையாட்டுப் பிரியர்களுக்கு ‘கோல்ப்ஃபர்ஸ் டே அவுட்’ எனும் சுற்றுலாத் தொகுப்புத் திட்டமும் உள்ளது. மூன்று வேளை உணவுடன் இருவழிப் பயணப் படகுச் சேவைகளுக்கான கட்டணத்தையும் சேர்த்து, இந்த சுற்றுலா தொகுப்புக்கு ஒரு நபருக்கான கட்டணம் $222. 

இது குறித்த கூடுதல் தகவல்களை www.desarucoast.com இணையப் பக்கத்தில் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!