விடுமுறையில் கண்டுகளிக்க அண்மைய இணையத் தொடர்கள்

பரபரப்பான பணிச்சூழலில் இருந்து விடுபட்டு விடுமுறை கிடைத்தால் பயணம் செய்பவர்கள் ஒருபுறம் என்றால், ஓடிடி தளங்களில் வெளியாகும் இணையத் தொடர்களைக் கண்டுகளித்து வீட்டிலிருந்தபடி விடுமுறையைக் கழிக்கும் போக்கும் மறுபுறம் அதிகரித்துள்ளது.

அவ்வாறு, இந்த விடுமுறையைக் கொண்டாட, தமிழில் வெளியாகி பிரபலமடைந்த சில குறுந்தொடர்களின் தொகுப்பு.

தி வில்லேஜ்

பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஆர்யாவுக்கு இது முதல் இணையத் தொடர். படம்: இணையம்

இயக்குனர் மிலந் ராவ் இயக்கத்தில், ஆர்யா, ஆலியா, ‘ஆடுகளம்’ நரேன், ஜார்ஜ் மரியான், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது ‘தி வில்லேஜ்’ குறுந்தொடர்.

ஆறு அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரில், மருத்துவராக நடித்திருக்கும் ஆர்யா, தம் மனைவி, பிள்ளைகளுடன் சென்னைக்கு வாகனத்தில் செல்கிறார். அப்போது கட்டியல் எனும் கிராமத்தில் அவருடைய மனைவியும் பிள்ளைகளும் காணாமல்போக, அதன் பின்னால் இருக்கும் மர்மங்கள் அவிழ்க்கப்பட்டனவா எனும் ரீதியில் படைக்கப்பட்டுள்ள இத்தொடர், திகில் பட ரசிகர்களுக்குச் சிறந்த தேர்வு.

வேற மாறி ஆபிஸ்

இதுவரை 51 அத்தியாயங்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்னும் பல அத்தியாயங்கள் வரவுள்ளதாகத் தெரிகிறது. படம்: இணையம்

‘வேற மாறி ஆபிஸ்’ எனும் நகைச்சுவைக் குறுந்தொடர் அண்மையில் ‘ஆஹா தமிழ்’ தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சின்னத்திரை நட்சத்திரங்கள் விஷ்ணு விஜய், ஆர்.ஜே.விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே.பார்வதி, ஷியாமா, லாவண்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள இத்தொடரில் முதல்கட்டமாக ஆறு அத்தியாயங்கள் வெளியாகியுள்ளன.

ஒரு சிறு மின்வணிக நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடையே நடக்கும் அன்றாட நிகழ்வுகளைச் சுவைபட சித்திரிக்கிறது இத்தொடர்.

ஆட்குறைப்பு ஏற்படுத்தும் சிக்கல், அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் புதியவர்களுக்கும் இடையிலான மோதல், நட்பு என பல பரிமாணங்களை அழகுறச் சித்திரிக்கும் இத்தொடர் 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றதோடு, அதில் இன்னும் பல அத்தியாயங்கள் வர உள்ளதாகத் தெரிகிறது.

லேபில்

இளவரசு, சுரே‌ஷ் சக்கரவர்த்தி என பல பிரபலங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர். படம்: இணையம்

‘கனா’ படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், வடசென்னையை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் ‘லேபில்’ குறுந்தொடர், இளையர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ தளத்தில் வெளியாகியுள்ள இத்தொடரில் நடிகர் ஜெய், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.

எவ்வித தவறும் செய்யாவிட்டாலும், வடசென்னையில் உள்ள பலர் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படும் நிலையை மாற்றப் போராடும் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரைச் சுற்றி நடக்கும் கதைக்களத்தை இத்தொடர் கொண்டுள்ளது.

விடையில்லை கேள்விகளோடு நான்கு அத்தியாயங்கள் வெளிவந்துள்ள நிலையில், அடுத்தடுத்த அத்தியாயங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மை3

தொழில்நுட்பம், காதல், நகைச்சுவை கலந்த கலகலப்பான இணையத் தொடர் ‘மை3’. படம்: இணையம்

சாந்தனு, ஹன்சிகா மோத்வானி, முகின் ராவ் உள்ளிட்ட பிரபலங்களின் நடிப்பில், கொரியத் தொடர் ஒன்றின் சாயலில் எடுக்கப்பட்ட ‘மை3’ எனும் நகைச்சுவைக் குறுந்தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இத்தொடர் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

ஹன்சிகா இயந்திரப் பெண்ணாக நடித்திருக்கும் இத்தொடர், இணையவாசிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுதவிர, திரையரங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்று இணையத்திலும் வெளியாகியுள்ள திரைப்படங்கள், ‘ஓடிடி பிரிமியர்’ எனப்படும் பிரத்தியேகமாக இணையத்தில் வெளியாகும் படங்கள் தொடங்கி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பிறமொழியில் உருவாகி தமிழில் மொழிபெயர்க்கப்படும் தொடர்கள் வரை, விடுமுறைப் பொழுதை வீட்டிலேயே கழிக்க தேர்வுகள் ஏராளம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!