புத்தாண்டைத் தொடங்க ‘அலெக்ஸ்பீரியன்ஸ்’ நகைச்சுவை இசைநிகழ்ச்சி

புத்தாண்டைத் தொடங்க ‘அலெக்ஸ்பீரியன்ஸ்’ நகைச்சுவை இசைநிகழ்ச்சி

2 mins read
a0e36c71-69ed-422d-bc91-0ea59a475a14
அடுத்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நடக்கவுள்ள ‘அலெக்ஸ்பீரியன்ஸ்’ நகைச்சுவை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகி வருகின்றன. - படம்: மாஸ்க் ஸ்டூடியோஸ்

இவ்வாண்டின் தொடக்கத்தில் இரண்டு முறை சிறப்பாக நடந்தேறிய ‘அலெக்ஸ்பீரியன்ஸ்’ நகைச்சுவை இசைநிகழ்ச்சி, அடுத்த ஆண்டு மீண்டும் திரும்புகிறது.

நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகி வருகின்றன.

பிப்ரவரி 10ஆம் தேதி, மாலை 5 முதல் 8.15 மணி வரை ‘கார்னிவல்’ திரையரங்குகளில் இடைவெளி இல்லாமல் நிகழ்ச்சி பாதி தமிழிலும் பாதி ஆங்கிலத்திலும் நடைபெறும்.

‘அலெக்ஸ் இன் வண்டர்லேண்ட்’ நகைச்சுவை நிகழ்ச்சியின் தொடர்ச்சியே ‘அலெக்ஸ்பீரியன்ஸ்’. அலெக்ஸ் இதில் நகைச்சுவை வழங்குவதோடு, 80, 90களின் தமிழ்த் திரைப்பட இசையை வாசித்தும் பாடியும் மக்களை மகிழ்விப்பார்.

கஜோன், ஹார்மோனியம், தவில், டஃப், பறை, ‘ஹை ஹேட்ஸ்’, தப்லா ஆகிய இசைக் கருவிகளை வாசிப்பார் அலெக்ஸ்.

“முதல் இரு முறைகள் நாங்கள் சிங்கப்பூரில் இந்நிகழ்ச்சியை நடத்தியபோது, இருந்த 1000 நுழைவுச்சீட்டுகளும் 24 மணி நேரத்திற்குள் விற்று முடிந்தன. அதனால் நிகழ்ச்சியைக் காணத் தவறிய பலரும் மீண்டும் நிகழ்ச்சியைக் கொண்டுவர கோரிக்கை விடுத்தனர்.”

“அப்பொழுது அலெக்ஸ் தன் உலகச் சுற்றுலாவைத் தொடங்கவிருந்ததால் எங்களால் உடனடியாக மூன்றாம் முறையாக நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. இப்பொழுதுதான் அதற்கான வாய்ப்பு அமைந்தது,” என்றார் இதை ஏற்பாடு செய்யும் ‘மாஸ்க் ஸ்டூடியோஸ்’ நிறுவனர் கார்த்திக் அழகப்பன்.

சிங்கப்பூரில் அலெக்ஸ் இந்நிகழ்ச்சியைப் படைப்பது இதுவே இறுதி முறையாக இருக்கும் என்றும் கூறினார் கார்த்திக்.

13 வயதுக்கு மேற்பட்டோருக்கான, குடும்பத்திற்கு ஏதுவான நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

1000 நுழைவுச்சீட்டுகளில் தற்போது சிலவற்றே மீதமுள்ளதாகக் கூறினார். நுழைவுச்சீட்டுகளை https://sg.bookmyshow.com/events/ALEXSG23 இணையதளத்தில் வாங்கலாம்.

குறிப்புச் சொற்கள்