இலக்கியக் கலை விழாவில் புத்தகக் குவியல்

இலக்கியக் கலை விழாவில் புத்தகக் குவியல்

2 mins read
d4e10b2c-b614-4333-8b0e-025548df30a4
‘டெக்ஸ்ச்சர்ஸ்’ - இலக்கியக் கலை விழாவின் ‘ரீட் அட் ஹோம்’ அங்கம். - படம்: ஆர்ட்ஸ் ஹவுஸ்
multi-img1 of 3
Google News Preferred Icon

ஆர்ட்ஸ் ஹவுஸின் வருடாந்திர ‘டெக்ஸ்ச்சர்ஸ்’ இலக்கியக் கலை விழா 2024 ஜனவரி 19ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

ஆர்ட்ஸ் ஹவுஸ் கட்டடத்தில் நடைபெறும் இவ்விழா ‘லைட் டு நைட் சிங்கப்பூர் விழா’ மற்றும் சிங்கப்பூர் கலை வாரம் ஆகியவற்றுடன் சேர்த்து கொண்டாடப்படவுள்ளது. 

‘ரீஇமேஜின்’ (Reimagine)  எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் சிங்கப்பூர் கலை சார்ந்த பல்துறை தொடர்பான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வுகள் சிலவற்றை இலவசமாகவும் மேலும் சிலவற்றை கட்டணம் செலுத்தியும் காணலாம். 

‘தேங்க் யூ ஃபார் ஹோல்டிங்’ எனும் பல்துறை கலை சார்ந்த மேடை நிகழ்வு, ‘ஹாரர் ரீஇமேஜின்ட்’ எனும் ஐந்து உள்ளூர் திகில் கதைகளைக் கொண்ட காட்சியமைப்பு உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ன் முதல் தளத்தில் உள்ள முகப்பு அரங்கில் ‘சியோ புக்ஸ்’ எனும் புத்தகக்கூடமும் நிறுவப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அங்கு காண முடியும். 

மேலும், தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து ‘ரீட் அட் ஹோம்’ எனும் அங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த அங்கத்தில் மின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ன் முதல் தளத்தில் உள்ள நடைக்கூட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்த அங்கத்தில் கியூஆர் குறியீட்டை வருடி புத்தகங்களை இரவல் பெறலாம். 

இத்துடன், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் ஓவிய மெருகூட்டல்களும் மின்னிலக்க காட்சியமைப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இவை போன்ற பல்வேறு சுவாரசிய நிகழ்வுகள் நிறைந்த இவ்விழா குறித்த கூடுதல் விவரங்களுக்கும் நுழைவுச் சீட்டுகள் பற்றிய தகவல்களுக்கும் https://artshouselimited.sg/tah-textures-2024 இணையப் பக்கத்தை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்