தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரர்கள் விரும்பும் சுற்றுலாத் தலங்கள்

2 mins read
1f7829b7-63ae-47bb-a2d8-1a759aeb720c
தாய்லாந்து தலைநகர் பேங்காக் - படம்: பிக்சபே
multi-img1 of 2

இவ்வாண்டு சிங்கப்பூரர்களிடையே பிரபலமாக இருந்த சுற்றுலாத் தலங்கள் பேங்காக், டென்பசார் (பாலி), தைப்பே ஆகிய நகரங்கள் என்கிறது அண்மையில் ‘ஸ்கைஸ்கேனர்’ நிறுவனம் நடத்திய ஆய்வு.

இரண்டரரை மணி நேர தொலைவில், பரபரப்பான இரவு சந்தைகள், பல்வேறு வகை உணவுகளோடு, பரந்த வணிக வளாகங்களைக் கொண்ட தாய்லாந்து தலைநகர் பேங்காக், சிங்கப்பூரர்களின் விருப்பப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

அழகான கடற்கரைகள், பெரிய விடுதிகள், நீர் விளையாட்டுகள் என சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடமான இந்தோனீசியாவின் பாலித் தீவு, சிங்கப்பூரர்கள் விரும்பும் இடங்கள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றுள்ளது.

2023ஆம் ஆண்டில் தென்கிழக்காசியாவில் ரசிக்கத்தக்க கலாசாரம், உணவு உள்ளிட்டவற்றை கொண்ட குறைந்த செலவில் மேற்கொள்ளக்கூடிய பயணங்களை சிங்கப்பூரர்கள் அதிகம் தேடியதாக இந்த ஆய்வு கூறுகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் பயனர்களின் தேவைகளைக் கண்டறிந்து, விமானச் சேவை, தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட உள்ளூர் பயணப் பரிந்துரைகளை ‘ஸ்கைஸ்கேனர்’ இணையத்தளம் வழங்கியதாகவும் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

மேலும் இவ்வாய்வில், 2023ஆம் ஆண்டு மலிவான விமான விலை (ஒரு நபருக்கு சராசரியாக $168) கொண்ட இடமாக யோக்யகார்த்தா, மலிவு விலையில் மூன்று நட்சத்திர விடுதிகள் கொண்ட நகரமாக மலேசியாவின் டெங்கில், மலிவான உள்ளூர் கார் வாடகை (ஒரு நாளைக்கு சராசரியாக $39) கொண்ட இடமாக அழகிய பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான மழைக் காடுகள் கொண்ட லங்காவித் தீவு திகழ்கிறது.

தங்களது காலநிலை செயல் திட்டத்தை வெளியிட்டதோடு, சுற்றுப்புறத்துக்கு உகந்த கார்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பயனர்களுக்கு அளித்ததையும் உலகளவில் கடந்த சில ஆண்டுகளை விட இவ்வாண்டு மூமடங்கு பயனர்கள் அவ்வகை கார்களைத் தேர்வு செய்ததையும் ஆய்வு கோடிட்டுக் காட்டுகிறது.

இவ்வாண்டின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் இருந்து பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்களின் அனுபவத்தை மேம்படுத்த ஸ்கைஸ்கேனர் இணையத்தளம் பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது.

விருப்பமான இடத்தைத் தேர்வு செய்து, ஒரு மாதம் முழுவதும் விமானப் பயணச்சீட்டு விலையை ஆராய்ந்து தேர்வு செய்யும் வாய்ப்பையும் பயணத்திற்கான சிறந்த மாதம், விடுதிகளின் சராசரி கட்டணம் உட்பட பயனர்களுக்கு பொதுவாக எழும் பெரும்பாலான கேள்விகளுக்கு விரிவான விடை கொண்ட பிரிவையும் மேம்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்தி, ஹீப்ரு உள்ளிட்ட 32 உலக மொழிகளில் உள்ள இந்த இணையத்தளம், ‘எவ்ரிவேர்’ எனும் தேடல் கருவி மூலம் பரிந்துரைகளையும் வழங்கும் என்கிறது அந்நிறுவனம்.

‘சாட் ஜிபிடி’ நிரல் இணைப்பு மூலம் ‘ஜாக்ஸ் ஃபிளைட் கிளப்’, ‘கர்லி டேல்ஸ்’, ‘கைடு கீக்’ போன்ற பல இணையத்தளங்களுடனும் இணைந்து மேம்பட்ட அனுபவத்தைப் பயனர்களுக்கு வழங்க உள்ளதாக ஸ்கைஸ்கேனர் கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்