சிந்திக்க வைக்கும் கலைப் படைப்புகளை உருவாக்கும் ஷில்பா குப்தா

மனிதனின் எண்ணங்களையும் குணாதிசயங்களையும் வெளிப்படுத்தும் கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார் புகழ்பெற்ற கலைஞரான ஷில்பா குப்தா, 46. 

“மானுடவியலின் பல்வேறு சாராம்சத்தையும், தேசியவாதம், இன பேதம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளையும் முடிந்த வரை என் படைப்புகளில் புகுத்த முயல்கிறேன். எந்த ஒரு படைப்பும் ஓர் ஆழ்ந்த கருப்பொருளைக் கொண்டிருக்க வேண்டும். காண்போரை ஆக்ககரமாக சிந்திக்க வைக்கக்கூடிய ஆற்றலை எந்தவொரு படைப்பும் கொண்டிருத்தல் அவசியம்,” என்கிறார் இந்தியாவின் மும்பை நகரைச் சார்ந்த திருவாட்டி ஷில்பா.   

இவர் உருவாக்கிய, ஒரு தலையைக் கொண்ட இரு உடல்கள் சண்டையிடுவதைப் போன்ற நிலையில் உள்ள மிதவைச் சிலை ஒன்று சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் நிறுவப்பட்டுள்ளது. 

‘அன்டைட்டில்ட்’ எனும் பெயரிலான இந்த மிதவைச் சிலை சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தில் ‘இங் டெங் ஃபோங் கூரைத் தோட்ட கலைக்கூட’த்தில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த மிதவைச் சிலையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் காணலாம். அனுமதி இலவசம்.  

இந்த படைப்பில் வழக்கத்திற்கு மாறாக ஊதப்பட்ட மிதவை மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. காண்போரைக் கவரும் வண்ணம் அமைந்திருக்கும் இந்தப் படைப்பை பார்வையாளர்கள் தொட்டுப் பார்க்கவும் முடியும். குறிப்பாக, குழந்தைகள் இதனைத் தொட்டு உணர்ந்து இப்படைப்பு உணர்த்தும் கருத்துகளையும் தெரிந்து கொள்ளலாம். 

ஆறாவது முறையாக நடைபெறும் ‘இங் டெங் ஃபோங் ரூப்ஃ கார்டன் கமிஷன் தொடர்’ கண்காட்சியில் ஒவ்வோர் ஆண்டும் முன்னணி வெளிநாட்டுக் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

“என்னுடைய படைப்பு சிங்கப்பூரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இரு வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டும் விதமாகவும், அனைத்துலக அளவிலான பிரச்சினைகள், சமூகச் சிக்கல்கள் ஆகியற்றின் இரு வேறு பார்வைகளைப் பறைசாற்றவும் இந்த படைப்பில் முயன்றிருக்கிறேன் ,” என்றார் திருவாட்டி ஷில்பா . 

ஷில்பாவின் படைப்புகள் அனைத்துலக அளவில் பல்வேறு நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இத்தாலியின் வெனிஸ் நகரில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘வெனிஸ் பியனாலே‘ கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

மேலும், நியூயார்க்கின் அமன்ட் கலை மையம், தன்யா போனக்தார் கண்காட்சிகளிலும் இவருடைய படைப்புகளைக் காணலாம்.  

இந்த மிதவைச் சிலை குறித்த கூடுதல் தகவல்களை https://www.nationalgallery.sg/shilpagupta என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!