தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரத்தலையோடு தூங்கச் செல்வது தவறு

2 mins read
63fed697-cb3f-48eb-beab-083cc00390ba
தலைக்குக் குளியல் போடும் பெண் - படம்: கெட்டி இமேஜஸ்
multi-img1 of 3

பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் தலைக் குளியல் போட்ட பிறகு ஈரத்தலையோடு தூங்கச் செல்லவேண்டாம் என்று கூறும் ஆலோசனைகளை நாம் கேட்டதுண்டு. தாய்மார்கள், அதற்கான முக்கியமான காரணம் பிள்ளைகளுக்குக் காய்ச்சல் வந்து விடும் என்று கூறுகின்றனர். ஆனால் சளி, காய்ச்சல் வருவது ஈரத்தலையோடு உறங்குவதைவிட நுண்ணுயிரினாலும், கிருமிகளாலும்தான்.

முடி நிபுணர்கள் ஈரத்தலையோடு தூங்குவதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகள் வேறு என்கின்றனர். தலைமுடி ஈரமாக இருந்தால் அது எளிதில் வீக்கமான தோற்றத்திற்கு மாறிவிடும். ஈரத்தலையோடு தூங்கினாலும் கூந்தலைக் கொண்டை போட்டுக்கொண்டு தூங்கினாலும் அதுவும் முடிக்கு வீக்கமான தோற்றத்தை உண்டாக்கும். இதனால் முடியும் அதன் வேர்ப்பகுதியும் வலுவிழந்து விடுகின்றன.

ஏற்கெனவே சேதமடைந்த முடி கொண்டவர்கள் ஈரத்தலையோடு உறங்கினால் அது அவர்களின் முடியை எளிதில் முறிந்துபோகும் நிலைக்குத் தள்ளிவிடும்.

தேவையற்ற ஈரப்பதம் இருப்பதால் அது தலையின் மேல் பாகத்தில் இருக்கும் நல்ல நுண்ணுயிர்களைப் பாதிக்கக்கூடும். இதனால் நல்ல நுண்ணுயிர்கள் அழிந்துவிடக்கூடும்.

பணி முடிந்து வீட்டுக்குத் தாமதமாக திரும்பியதும் தலை குளித்துவிட்டு முடியை உலர வைத்து தூங்கச் செல்வது ஒரு வகையில் சிரமமாகருந்தாலும் முடியை முழுமையாக காயவிட்ட பிறகே தூங்கச் செல்லவேண்டும்.

நிபுணர்கள் முடியை விரைவாக காய வைக்க சில குறிப்புகளை பரிந்துரைக்கிறார்கள்.

தலைகுளித்த பின் முடிக்கு புரதச்சத்து நிறைந்த மாஸ்க் பூசினால் அது முடியை மிளிரச் செய்வதோடு, மாஸ்க் சிறிய அளவில் ஈரப்பதத்தை உறிஞ்சுவிடும். இதனால் முடியை விரைவாக காய வைத்தும் விடலாம். முடியை காய வைத்த பிறகு அப்படியே தூங்கப்போவதற்குப் பதிலாக முடியை நன்கு வாறினால் சிக்கு வருவதும் குறையும், முடியும் எளிதில் சேதமடையாது. இந்த குறிப்பை முடி ஈரமாக இருக்கும்போதே பின்பற்றலாம்.

முடியை காய வைத்து சீவும் போது தலைக்கும் முடிக்கும் சீரான ரத்த ஓட்டம் கிடைக்க நிபுணர்கள் சிலர் துடுப்பு சீப்பு பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். முடியை இரவு நேரத்தில் முழுமையாக காய வைக்க முடியாதவர்கள் முடியை சேதத்திலிருந்து பாதுகாக்க ‘சீரம்’ எனும் திரவ அடிப்படையிலான முடிக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தை அல்லது முடிக்கான மாஸ்க்கை பூசலாம்.

முடி நம் தலையணை உறையில் உரசும்போது ஏற்படும் சேதம் குறைவாக இருந்தாலும் நிபுணர்கள் பட்டுத் துணியால் செய்யப்பட்ட தலையணை உறைகளைப் பயன்படுத்துவது சிறந்தது என்கிறார்கள். காலையில் எழுந்ததும் முடி அழகாக இருக்க வேண்டும் என்றால் முடி மேல் சிறிதளவு ஈரப்பதமாக கிரீமை பூசினால் முடி மென்மையாக இருக்கும்.

நம்மில் பலர் குளிரூட்டி இல்லாமல் தூங்குவதில்லை. இதனால் நம் சருமம் காய்ந்துவிடுவது மட்டுமின்றி முடியும், தலையும் ஈரப்பதத்தை இழக்கின்றன. இதற்குப் புதிய தீர்வாக அலுமினியத் தகடுகளை வைத்து மூடியை உரசினால் முடி மென்மையாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்