சமூகம் மேம்பட நிதி திரட்டும் இந்திய சமையல் பயிலரங்கு

சமூக உண்டியல் அமைப்பின் 40வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, ‘ஃபுட் ஃபார் குட்’ எனும் சமையல் பயிலரங்கு மூலம் நிதி திரட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது. சமையல் கலைஞர்கள் தங்களது திறமைகளை ஒரு சிறந்த நோக்கத்திற்காக, சமூகத்திற்கு நன்மை பயக்கும் விதமாக பயன்படுத்துவது இந்நிகழ்வின் தனிச்சிறப்பு.

சிங்கப்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஷர்மா வழிநடத்தும் இப்பயிலரங்குகள் ஜனவரி 19, 26 ஆகிய தேதிகளில் ‘சஃப்ரா-கலினரி எக்ஸ்பிரியன்ஸ் ஸ்டூடியோ’வில் நடைபெறுகிறது.

இந்தியா, தாய்லாந்து, சீன, மலேசிய உணவு வகைகளில் கைதேர்ந்த கலைஞரான அனில் குமார் ஷர்மா, 59, சில வடஇந்திய, தென்னிந்திய உணவு வகைகள் குறித்த செயல் விளக்கத்துடன் கூடிய பயிலரங்காக இதை வழிநடத்த உள்ளார்.

ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் வடஇந்திய உணவுப் பயிலரங்கில் உலர் விதைகள் சேர்த்து சமைக்கும் காஷ்மீரி நான், தந்தூரி சிக்கன், சிக்கன் டிக்கா, சிக்கன் சீக் கெபாப், கேச்சும்பர் எனப்படும் சாலட் வகை உள்ளிட்டவற்றை சமைக்க கற்பிக்கப்படும்.

ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் தென்னிந்திய உணவுப் பயிலரங்கில், நெய்ச்சோறு, மீன் கறி, கனவாய் மசாலா, இறால் சம்பால், அப்பளம், பச்சடி உள்ளிட்ட வாழையிலை விருந்து உணவுப் பதார்த்தங்கள் செய்முறை விளக்கத்துடன் கற்றுத் தரப்படுகிறது.

இவ்விரு பயிலரங்குகளிலும் கலந்துகொள்ள தலா $88 நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. வசூலிக்கப்படும் முழுக் கட்டணமும் சமூக உண்டியல் மூலம் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள், உதவி தேவைப்படும் இளையர்கள், ஆதரவற்ற மூத்தோர், உடல், மன குறைபாடுடையோரின் குடும்பங்களையும் வாழ்வையும் மேம்படுத்த அளிக்கப்படும்.

இது சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைந்த சமூகமாக மேம்பட சமூக உண்டியல் அமைப்பின் ஒரு முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 40 ஆண்டுகளாக பல்வேறு பயிலரங்குகளை நடத்திவரும் சமையல் கலைஞர் ஷர்மா, “இந்திய உணவு பெரும் பாரம்பரியம் கொண்டது. பல்வேறு மூலப்பொருள்களும் நுணுக்கங்களும் நிறைந்தது. அவற்றை எளிதாகவும் வேகமாகவும் செய்ய கற்றுத் தருவது பயிலரங்கின் நோக்கம். பங்கேற்பாளர்கள் ஒரு கலகலப்பான, பரபரப்பான சமையல் அனுபவத்தைப் பெறுவர்,” என்றார்.

உலகின் ஆகப் பெரிய ‘ரோஜாக் பிளேட்’ படைத்து 2011ல் கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவர், இந்திய சமையலுடன் மலாய், சீன, தாய்லாந்து, கம்போடிய, கொரிய, ஜப்பானிய உணவு வகைகள் அனைத்தையும் சமைத்து அசத்தி வருகிறார்.

இந்தியப் பாரம்பரிய கோவில் உணவுகள், 25 வட்டார வகை உணவு வகைகள் என ஏராளமான உணவு வகையில் இருந்து, மக்களிடையே பொதுவான விருப்பத் தேர்வாக இருக்கும் உணவுகளைப் பயிலரங்கில் சமைக்கக் கற்றுத்தர உள்ளதாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!