‘கடல் நாகங்கள் பொன்னி’ கவிதை நூல் வெளியீடு

‘கடல் நாகங்கள் பொன்னி’ கவிதை நூல் வெளியீடு

படம்: இன்பா

26 Jan 2024 - 8:44 pm

1 mins read

கவிமாலையின் மாதாந்திரச் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜனவரி 27), மாலை 6.30 மணிக்கு தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் 16ஆம் தளத்தில் உள்ள ‘த போட்’ அரங்கில் நடைபெறவிருக்கிறது. 

இம்மாதக் கவிமாலையின் சிறப்பு அங்கமாக இன்பாவின் ‘கடல் நாகங்கள் பொன்னி’ கவிதை நூல் வெளியீடு நடைபெறவுள்ளது.

மகேஷ்குமார், முனைவர் சரோஜினி செல்லகிருஷ்ணன், சித்துராஜ் பொன்ராஜ், ஜெயா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு நூலறிமுகம் செய்து வாழ்த்துரைகளை வழங்கி சிறப்பிக்கவிருக்கிறார்கள். 

மாணவர்களின் கவிதை வாசிப்பு (தமக்குப் பிடித்த, படித்த கவிதைகளை வாசித்தல்), ‘புது நெல் புதுச் சொல்’ எனும் தலைப்பிலான இம்மாதப் போட்டிக் கவிதைகள் வாசிப்பு, பரிசளிப்பு ஆகியவையும் இடம்பெறவுள்ளன. 

கவிதை ஆர்வமுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் நேரடியாக வந்து கலந்துகொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. அனுமதி இலவசம். 

தொடர்புக்கு 91461400 என்ற எண்ணை அழைக்கவும்.

இந்நூல் தமிழகத்திலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜனவரி 13ஆம் தேதியன்று வெளியீடு கண்டது.

குறிப்புச் சொற்கள்