ஆஸ்திரேலியாவில் கால்பதித்த முதல் இந்திய நகைக்கடை

1 mins read
e0c0fdd8-4c6d-401c-aebc-c607d45906a8
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நகைக்கடையை, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பிரெட் லீ திறந்து வைத்தார். ஆஸ்திரேலியாவையும் சேர்த்து உலகின் 13 நாடுகளில் கிளை பரப்பியுள்ளது இந்நிறுவனம். - படம்: மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்

சிட்னி: புகழ்பெற்ற இந்திய நகைக்கடையான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கால் பதித்துள்ளது.

அங்குள்ள லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அமைந்துள்ள ஹாரிஸ் பார்க் எனுமிடத்தில் அது தன் கிளையைத் திறந்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற விளையாட்டாளர் பிரெட் லீ, சிட்னி கிளையைத் திறந்துவைத்தார்.

இந்தக் கடை சிட்னி நகரில் செயல்படும் ஆகப் பெரிய நகைக்கடை எனக் கூறப்படுகிறது.

இதில் 18K, 22K தங்க, வைர நகைகளுடன் இதர அரியவகை ரத்தினக் கற்களையும் வாங்கலாம்.

வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப நகைகளை வடிவமைத்துத் தருகிறது இக்கடை.

உலகெங்கும் 340 கடைகளை நடத்தி வருகிறது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்.

ஆஸ்திரேலியாவையும் சேர்த்து உலகின் 13 நாடுகளில் கிளை பரப்பியுள்ளது இந்நிறுவனம்.

இந்தியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கத்தார், குவைத், ஓமான், சவூதி அரேபியா, பஹ்ரேன், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே அதன் கிளைகள் செயல்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்