தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எலும்பை வலுவாக்கும் தட்டைப்பயறு சுண்டல்

2 mins read
6ec2ef72-a0f7-46d1-a54c-0261b0b109f2
தட்டைப்பயறு சுண்டல். - படம்: ஊடகம்
multi-img1 of 2

ஒரு சிலர் முதுகு வலி, கைகால் மூட்டு வலியால் அவதிப்படுவர். எலும்புகள் உறுதியாக இல்லாததால்தான் இந்த மாதிரியான பிரச்சினைகள் வருகின்றன என்று மருத்துவம் கூறுகிறது.

உறுதியான எலும்புகளைப் பெற மணமணக்கும் சுண்டலை ஒரு கைப்பிடியளவு தினமும் பின்வரும் வழிமுறை போல் செய்து சுவைத்துப் பாருங்கள். இதனால், உடல் எலும்புகள் வலுவாகும்.

தேவையான பொருள்கள்:

சிவப்புத் தட்டைப்பயறு – முக்கால் குவளை

பாசிப்பருப்பு – 2 மேசைக் கரண்டி

மெலிதாக நறுக்கிய வெங்காயம் – அரைக்குவளை

இஞ்சி – அரை அங்குலத்துண்டு

மிளகாய்த்தூள் – அரை கரண்டி

உளுந்தம்பருப்பு – அரை கரண்டி

கொத்துமல்லித்தழை - சிறிதளவு

வெண்ணெய் – ஒரு மேசைக் கரண்டி

செய்முறை:

தட்டைப்பயற்றை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

ஒரு சிறிய குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும்.

அதன்பின்னர், நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக வதக்கி பாசிப்பருப்பு மற்றும் ஊறவைத்த தட்டைப்பயற்றை சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மூடிவைத்து 5 விசில் சத்தம் வரும் வரை வேகவைத்து‌ இறக்கவேண்டும்.

அதன்பின் குக்கரைத் திறந்து அதில் வெண்ணெய் சேர்த்து லேசாக ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவேண்டும்.

குறிப்புச் சொற்கள்