தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிரோவிய உலகில் தலைகீழாகும் ‘மெக்டோனல்ட்ஸ்’ உணவகம்

2 mins read
e735205f-78d0-44ee-9e63-3311704ce8b6
‘அனிமே’ உயிரோவிய உலகில் மெக்டோனல்ட்ஸ் உணவு வகைகளும் மனிதர்களைப் போல பேசும் எனக் கூறப்பட்டது. - படம்: மெக்டோனல்ட்ஸ்

ஜப்பானிய உயிரோவியக் கலையான ‘அனிமே’க்கான ரசிகர் பட்டாளம் உலகெங்கும் உள்ளது என்றால் அது மிகையாகாது.

பல்வேறு உயிரோவியத் திரைப்படங்களையும் நாடகங்களையும் கண்களால் விழுங்கக் காத்திருக்கின்றனர் இந்தத் தீவிர ரசிகர்கள்.

இத்தகைய ‘அனிமே’ ரசிகர்களைத் தன்பக்கம் சுண்டி இழுக்க முயலும் மெக்டோனல்ட்ஸ் நிறுவனம், நூதனமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ‘நரூட்டோ’ மற்றும் ‘தோக்கியோ கோல்’ நிகழ்ச்சிகளை உருவாக்கிய பேரட் நிறுவனத்துடன் ‘அனிமே’ நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கப் போவதாக மெக்டோனல்ட்ஸ் இம்மாதம் 21ஆம் தேதி தெரிவித்தது.

View post on Instagram
 

இதன் தொடர்பான காணொளியை மெக்டோனல்ட்ஸ் தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ‘பிக் மேக்’ பர்கர் வடிவிலான காதொலிக் கருவி அணிந்தவரையும் இந்தக் காணொளி காட்டுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் இம்மாத இறுதிக்குள் வெளிவரும் என்கிறது அந்நிறுவனம்.

இதற்கு முன்னதாக ‘அனிமே’ உயிரோவியங்களை மெக்டோனல்ட்ஸ் தனது விளம்பரங்களில் பயன்படுத்தியுள்ளது. ‘கிப்லி’ என்ற ‘அனிமே’ நிறுவனத்திற்கு ஈடான அதன் வடிவமைப்புகளும் குறைவான அதிர்வலைகள் கொண்டுள்ள ‘லோ-ஃபை’ இசையும் இணையத்தில் தீயாகப் பரவியுள்ளன.

கேஎஃப்சி மெய்நிகர் உலகில் ‘டேட்டிங்’

கர்னல் சேண்டர்ஸ்: வாலிபரா? வயோதிகரா?
கர்னல் சேண்டர்ஸ்: வாலிபரா? வயோதிகரா? - படம்: கேஎஃப்சி/சைஓப்ஸ்

மெக்டோனல்ட்ஸ் காணொளியில் காணப்படும் கண்கவர் கதாபாத்திரங்களை வைத்துப் பார்க்கும்போது அதன் ‘அனிமே’ நிகழ்ச்சி, கேஎஃப்சி உணவகம் தயாரித்த ‘டேட்டிங்’ விளையாட்டைப்போல உருவாக்கப்படக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர்.

நிஜ வாழ்க்கையில் துணை தேட இயலாதோர் இதிலாவது துணைதேடி மகிழலாம் என்பது இத்தகைய விளையாட்டுகளின் குறிக்கோள் எனக் கூறப்படுவதுண்டு.

வழக்கமாக வயதான தாத்தாவாகச் சித்திரிக்கப்படும் ‘கேஎஃப்சி’ நிறுவனரான ‘கர்னல் சேண்டர்ஸ்’, இந்த ‘டேட்டிங்’ விளையாட்டில் கட்டிளங்காளையாகக் காணப்படுகிறார்.

உணவுச்சுவைக்கு அப்பாற்பட்ட சுவைகளை வழங்கும் முயற்சியாக ‘ஐ லவ் யூ கர்னல் சேண்டர்ஸ்’ என்ற அந்த விளையாட்டைக் கடந்தாண்டு அறிமுகம் செய்தது கேஎஃப்சி. இதேபோல, மெக்டோனல்ட்ஸ் மெய்நிகர் உலகில் ‘டேட்டிங்’ சேவையை வழங்கக்கூடும் என்ற கிசுகிசுக்கள் ‘அனிமே’ விளையாட்டு வட்டங்களில் பரவுகின்றன.

குறிப்புச் சொற்கள்