இரத்தத்தில் குறையும் சர்க்கரை அளவை அதிகரிக்கும் வழிமுறைகள்

இரத்தத்தில் குறையும் சர்க்கரை அளவை அதிகரிக்கும் வழிமுறைகள்

2 mins read
3f7dc4d4-551a-4637-a8a0-ea845ec1bfc6
படம் - பிக்சபே

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது எவ்வளவு ஆபத்தோ, அதே அளவுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும் மிகவும் ஆபத்தானது.

இரத்தச் சர்க்கரைக் குறைவு ‘ஹைபோக்ளைசிமியா’ என்று அழைக்கப்படுகிறது.

ஒருவரது இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்திருந்தால் அவர் உணவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் மருந்து அல்லது இன்சுலின் உதவியுடனும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

குறைந்த சர்க்கரை அளவின் அறிகுறிகள்

[ο] தலைவலி, நடுக்கம், தலைச்சுற்றல், பசி, குழப்பம், எரிச்சல், இதயத் துடிப்பு அதிகரித்தல் ஆகியவை குறைந்த சர்க்கரையின் அறிகுறிகள்.

[ο] தோல் மஞ்சள் நிறமாவது, வியர்வை, பலவீனம்

[ο] மேற்கண்ட அறிகுறிகள் புறக்கணிக்கப்பட்டால் வலிப்பின் தாக்கம் ஏற்படலாம்.

[ο] இரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருந்து, சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் கோமா நிலைக்குச் செல்லும் அபாயம் உள்ளது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏன் குறைகிறது?

[ο] அதிகப்படியான மருந்து, இன்சுலின் ஊசி பயன்பாட்டால் சர்க்கரை அளவு குறையலாம்.

[ο] நீரிழிவு நோயாளிகள் உணவைத் தவிர்த்தால் அல்லது குறைவான உணவை உட்கொண்டால் அவர்களின் இரத்தச் சர்க்கரை அளவு குறையக்கூடும்.

குறைந்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த குறிப்புகள்

[ο] மருத்துவரின் ஆலோசனைப்படி இரத்தச் சர்க்கரை அளவை தினமும் பரிசோதிக்க வேண்டும்.

[ο] கண்டிப்பாக காலை உணவை உட்கொண்ட பின்னர் வீட்டை விட்டு வெளியே செல்லவும்.

[ο] இரத்தத்தில் சர்க்கரை குறைவாக இருக்கும்போது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும்.

[ο] ஒருவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் அதை அதிகரிக்க சீனி, இனிப்புகள், சாக்லேட் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. அவர்கள் வெல்லம், குளுக்கோஸ் பவுடர் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

[ο] அரை கப் புதிதாகப் பிழிந்த பழச்சாறு குடிக்கலாம். குறிப்பாக ஆரஞ்சு, ஆப்பிள் பழச்சாறு போன்ற இயற்கை சர்க்கரை உள்ள பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளும் போது இரத்தச் சர்க்கரை அளவு சமநிலைக்கு வரும்.

[ο] ஒரு கப் பால் குடிக்கவும். ஒரு ஸ்பூன் தேனையும் எடுத்துக் கொள்ளலாம். தேனை டீ அல்லது தயிரில் கலந்து சாப்பிட இரத்தச் சர்க்கரை அளவு சீராகும்.

[ο] ஏதேனும் உலர் பழங்களை மென்று சாப்பிட சர்க்கரையின் அளவு சீராகும்.

(இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது)

குறிப்புச் சொற்கள்