தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘செலவைவிட கனவே பெரிது’: சிங்கப்பூரில் ‘சுவிஃப்ட்டீஸ்’

2 mins read
தொட்டதெல்லாம் பொன்னாக்கும் டெய்லர் சுவிஃப்ட், இப்பொழுது சிங்கப்பூரையும் பன்னாட்டு ரசிகர்களின் மனங்களையும் தொட்டுள்ளார்
5d152d0c-3d46-40d2-84ca-c2366a23ff3e
சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் மார்ச் 2 முதல் 9 வரை டெய்லர் சுவிஃப்ட்டின் ஆறு இசைநிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

உலகையே சிங்கப்பூரின் தேசிய விளையாட்டரங்கில் இணைத்துள்ளது டெய்லர் சுவிஃப்ட்டின் இசை.

இலங்கையிலிருந்து தாய் - மகள், கோலாலம்பூரிலிருந்து இரு சகோதரிகள், ஆஸ்திரேலியாவிலிருந்து கணவன் - மனைவி - இப்படி டெய்லர் சுவிஃப்ட் இசைநிகழ்ச்சியைக் காண வெளிநாடுகளிலிருந்தும் பலர் வந்திருந்தனர்.

சிங்கப்பூருக்கு வரும் இந்த பன்னாட்டு ரசிகர் கூட்டம், சுவிஃப்ட்டுக்காக சிங்கப்பூர் வழங்கிய மானியத்தால் விளைந்த பலன்களைப் பறைசாற்றுகின்றது.

பொருளியலை உருமாற்றும் நிகழ்ச்சி

சுவிஃப்ட் தென்கிழக்காசியாவில் சிங்கப்பூரில் மட்டும்தான் நிகழ்ச்சி நடத்துவதால் பலரும் அவரைக் காண இங்குப் பயணம் செய்துள்ளனர்.

மேடையிலிருந்து 13 வரிசை தள்ளி, சுவிஃப்ட்டை அமர்ந்தபடியே காண ‘விஐபி-1’ நுழைவுச்சீட்டுகளுக்கு ஆளுக்கு S$1,200 செலவழித்தனர் ஹாங்காங்கிலிருந்து வந்த 23 வயது சாயும் அவரது தோழியும்.

“கடந்த ஏழு ஆண்டுகளாக சுவிஃப்ட் பாடல்களைக் கேட்டுவருகிறேன். சுவிஃப்ட்டுக்கு இருக்கும் தீவிர ரசிகர்களை நேரில் காண விரும்பி இங்கு வந்தேன்,” என்றார் சாய்.

தங்குவிடுதிக் கட்டணமாக ஒரு நாளைக்கு S$300 கொடுப்பதாக அவர் கூறினார்.

‘விஐபி’ அல்லாத சாதாரண நுழைவுச்சீட்டுகளுக்கு மொத்தம் S$2,700 கொடுத்து தன் பெற்றோருடன் இந்தியாவிலிருந்து வந்துள்ளார் 28 வயது ஆயுஷி.

“நாங்கள் இங்கு எட்டு நாள்கள் இருக்கப் போகிறோம். சிங்கப்பூருக்கு எங்களிடமிருந்து நிறைய பணம் செல்கிறது,” என சிரிப்புடன் கூறினார் ஆயுஷி.

முந்திக்கொண்ட சில சிங்கப்பூரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம். 20 வயது தேவன், S$200க்கு ஐந்தாம் பிரிவு நுழைவுச்சீட்டைப் பெற்றார். ஒன்பதாம் பிரிவு நுழைவுச்சீட்டுகளை மறுவிற்பனையாளரிடமிருந்து S$300க்குப் பெற்றதாகவும் இருவர் கூறினர்.

S$200க்கு ஐந்தாம் பிரிவு நுழைவுச்சீட்டைப் பெற்ற தேவன், 20.
S$200க்கு ஐந்தாம் பிரிவு நுழைவுச்சீட்டைப் பெற்ற தேவன், 20. - படம்: ரவி சிங்காரம்

‘சுவிஃப்ட் சிறந்த முன்மாதிரி’

குரலையும் தாண்டி, குணாதிசயங்கள், உடை, பாடல்வரிகள், அனைத்துக்கும் ‘சுவிஃப்ட்டீஸ்’ எனும் தனி ரசிகர் கூட்டமே ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிறது.

உயர்நிலைப் பள்ளியிலிருந்து ‘சுவிஃப்ட்டீஸ்’ஸாக இருந்துள்ள ரஞ்சனி, 28, பரவீன், 28, சுவிஃப்ட் பாடல்களின் தனித்துவம் தங்களைக் கவர்ந்துள்ளதாகக் கூறினர்.
உயர்நிலைப் பள்ளியிலிருந்து ‘சுவிஃப்ட்டீஸ்’ஸாக இருந்துள்ள ரஞ்சனி, 28, பரவீன், 28, சுவிஃப்ட் பாடல்களின் தனித்துவம் தங்களைக் கவர்ந்துள்ளதாகக் கூறினர். - படம்: டினேஷ் குமார்

‘அவர் தன்னடக்கமானவர். இன்றைய நிலையை எட்ட அவர் கடுமையாக உழைத்துள்ளார். பெண்களுக்கு அவர் பெரிய ஊக்கசக்தி,” என்றார் நிகழ்ச்சிக்குச் சென்ற ஹசுவினி இளங்கோவன், 30.

‘சுவிஃப்ட் பாடல்வரிகளோடு அனைவராலும் இணையமுடியும்.” என்றார் பிரனதி, 19.

இளையர்களின் மனப்போக்கை மாற்றும் ஆற்றல் சுவிஃப்ட் பாடல்களுக்கு இருப்பதாகவும் சிலர் கூறினர்.

“இங்கு வந்து இத்தனை தாராள மனம் படைத்த மக்களின் முன்னிலையில் இவ்வளவு பெரிய இசைநிகழ்ச்சியைப் படைப்பது என்னை நெகிழச் செய்கிறது,” என நன்றி கூறினார் சுவிஃப்ட்.

என் தாயார் சிங்கப்பூரில்தான் படித்தார். என் வாழ்க்கை முழுவதும் நான் சிங்கப்பூரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
டெய்லர் சுவிஃப்ட்
‘மிட்நைட்ஸ்’ இசைத் தொகுப்பில் நட்பு வளையல்களைப் பற்றி டெய்லர் சுவிஃப்ட் கூறியதால், ‘சுவிஃப்ட்டீஸ்’ இதுபோன்ற நட்பு வளையல்களைச் செய்து பரிமாறிக்கொள்கின்றனர்.
‘மிட்நைட்ஸ்’ இசைத் தொகுப்பில் நட்பு வளையல்களைப் பற்றி டெய்லர் சுவிஃப்ட் கூறியதால், ‘சுவிஃப்ட்டீஸ்’ இதுபோன்ற நட்பு வளையல்களைச் செய்து பரிமாறிக்கொள்கின்றனர். - படம்: ரவி சிங்காரம்
வித்தியாசமாகக் காட்சியளித்த சில ‘சுவிஃப்ட்’ ரசிகர்கள்.
வித்தியாசமாகக் காட்சியளித்த சில ‘சுவிஃப்ட்’ ரசிகர்கள். - படம்: ரவி சிங்காரம்

மோசடிகளில் ஏமாந்த ‘சுவிஃப்ட்டீஸ்’

சமூக ஊடகங்களில் சில ‘சுவிஃப்ட்டீஸ்’, நுழைவுச்சீட்டு மோசடிகளில் ஏமாந்ததாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இதனால் ‘கேரசல்’ தளம், பிப்ரவரி 23 முதல் மார்ச் 9 வரை சுவிஃப்ட் நுழைவுச்சீட்டு விற்பனைக்குத் தடைவிதித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்